Dailyhunt
அண்ணாமலை BJP இல் இருந்து விலகிறாரா?அர்ப்பணிப்புள்ள ஒரு வீரன்..- பியூஷ் கோயல் விளக்கம்!

அண்ணாமலை BJP இல் இருந்து விலகிறாரா?அர்ப்பணிப்புள்ள ஒரு வீரன்..- பியூஷ் கோயல் விளக்கம்!

Samayam Tamil 1 week ago

மிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக கூட்டணி சார்பில் பாஜக 27 இடங்களை போட்டியிட உள்ளது. அதன்படி, 27 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே, அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த நிலையில்,வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் 2026

மேலும், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக போகிறாரா? அல்லது புதிய கட்சித் தொடங்க போகிறாரா? ஒருவேலை மேலிடத்தில் பெரிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வலம் வரத்தொடங்கியது. இந்த நிலையில், அண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.


இந்த நிலையில்,தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், தமிழக சட் டப்பேரவைத் தேர்தலுக் கான பாஜக வேட்பாளர் பட்டியல் மாநிலக் குழுவின் பரிந் துரைகள் மற்றும் ஒவ்வொரு வேட்பாள ரின் விருப்பத்தின்
அடிப்படையில் மிகக் கவனமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. யார் எந்தத் தொகுதியில், எங்கு பணி யாற்ற விரும்புகிறார்கள் என்பது முழுமையாகக் கருத்தில் கொண்டது.

அண்ணாமலை போட்டியிடாதது காரணம்

பாஜக முன்னாள் மாநில த் தலைவர் அண்ணாமலை க ட்சியின் அர்ப்பணிப்புள்ள ஒரு வீரன்.அவர்தன்னை ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள் மட்டு ம் முடக்கிக் கொள்ள விரும் பவில்லை. மாறாக தமிழகம் முழுவ தும் சுற்றுப்பயணம்செய்து க ட்சியின் வெற்றிக் காகப் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார். அதனால், அண்ணாமலை இந் த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

பாஜகவின் தேர்தல்அறிக்கையின் முழுவதும் தயாராகிவிட்டது. அதை நாங்கள் ஆய்வு செய்து
வருகிறோம். விரைவில் டெல்லிமேலி டத்துடன் கலந்தாலோசித்து, இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ தேர்தல்அறி க்கை வெளியிடப் படும். பாஜக வேட்பாளர்கள் அனைவரும் இந்தத் தே ர் த லில் அமோகவெற்றி பெ றுவார்கள்என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசா மி தலைமையிலும்,மத்தியில் பிரதமர் மோடிவ ழி காட் டுதலிலும்தேசிய ஜனநாயகக் கூட டணி அடுத்த ஆட்சியைஅமைக்கும். தமிழக மக் க ள் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார் கள், அந்த மாற்றத்தைத்தேசிய ஜனநாயகக் கூட்டணிநிச்சயம் வழங்கும்.இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இதற்கிடையே அண்ணாமலை பேசுகையில், நான் தான் போட்டியிட விருப்பமில்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும், தான் 21 ஆம் தேதி வரை அனைத்துக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பரபரப்புரையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். மேலும், தான் எந்த தொகுதியில் வேண்டுமாலும் போட்டியிடலாம். தனக்கு விருப்பமில்லை என்று கூறினார். மேலும் அரசியல் வட்டாரத்தில், அண்ணாமலை பாஜக தலைவராக இருந்த போது முக்கிய நிர்வாகிகள் காட்டமாக நடந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலை மீது இன்று வரை அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil