தபாஹி விமர்சனம்: கீத்து மோகன்தாஸ் இயக்கியிருக்கும் டாக்சிக் படம் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
அந்த படத்தில் இருந்து லேடீஸ் அன்ட் லேடீஸ்னு வெளியிட்ட வீடியோவை பார்த்தே பலரும் திட்டித் தீர்த்தார்கள். இந்நிலையில் வெளியான தபாஹி பாடல் வீடியோவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
ஒரு பெண் அதுவும் நடிப்புக்கு பெயர் போன மலையாள திரையுலகை சேர்ந்த ஒருவர் இப்படி காமம் அதிகமாக படம் எடுத்திருக்கிறார் என நம்ப முடியவில்லை என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். தபாஹி பாடலில் ஹீரோ யஷ் மற்றும் கியாரா அத்வானி மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். அந்த வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
யஷ், கியாரா அத்வானி ஜாலியாக இருக்க ஒரு பாட்டு எடுத்திருக்கிறார்கள். இது மான்ஸ்டர் படமா இல்லை வேறு படமானு சந்தேகமாக இருக்கிறது. தபாஹி பாடலை பார்க்க நமக்கே கூச்சமாக உள்ளது. இதில் அதை கியாரா அத்வானியின் கணவரான நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா லைக் வேறு செய்திருக்கிறார்.
ருக்மணி வசந்துக்கு ரூ. 5 கோடியும், ஹூமா குரேஷிக்கு ரூ. 3 கோடி சம்பளமும், தாரா சுதாரியாவுக்கு ரூ. 2 கோடியும் கொடுத்துள்ளனர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் டாக்சிக் படம் ரிலீஸுக்கு முன்பு பெண்கள் விஷயத்தால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பெண்களை கவர்ச்சிப் பொருளாக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் வேதனை என்னவென்றால் இயக்குநர் ஒரு பெண் என்று சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சேட்டன்கள், சேச்சிகளும் கூட தபாஹியை பார்த்துவிட்டு கீத்து மோகன்தாஸை விமர்சித்து வருகிறார்கள்.
இதற்கிடையே டாக்சிக்கை எல்லாம் விளம்பரம் செய்ய நேரமிருக்கிறது ஆனால் எங்கள் விஜய்ணாவின் ஜனநாயகன் பட ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுக்க மட்டும் நேரம் இல்லையா மிஸ்டர் வெங்கட் நாராயணா என கேட்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

