Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் விலை: 3 மாதங்களில் கிடுகிடு உயர்வு- தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் விலை: 3 மாதங்களில் கிடுகிடு உயர்வு- தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

Samayam Tamil 2 weeks ago

மிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்தார்.

அதில், அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டினார். அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்த பொருள் எடுத்தாலும் கடந்த 3 மாதங்களில் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர். குறிப்பாக தவெக அரசு அமைந்த பிறகு விலைவாசி உயர்வு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

அத்தியாவசிய பொருட்கள்

மே மாதம்

ஆகஸ்ட் மாதம்

அரிசி விலை
ரூ.55ரூ.75
வெங்காயம் விலைரூ.40ரூ.80
துவரம் பருப்பு விலை
ரூ.150
ரூ.180
சர்க்கரை விலை
ரூ.40
ரூ.70

சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்பு

இந்த விலை ஏற்றத்தால் தமிழக மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். மளிகை கடை பக்கம் செல்வதை குறைத்து வருவதாக செய்திகள் வருகின்றன. ஆளுங்கட்சி உடன் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் தோழர்கள் இந்த விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்தியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கவன ஈர்ப்பு தீர்மானம்

மேலும் பேசுகையில், 2007ஆம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டிருந்தது. அப்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்கள், தமிழக மக்களை பாதிக்காத வகையில் சிறப்பு பொது விநியோக திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார். அதன்படி, ரேஷன் கடைகளில் பருப்பு, ரவை, எண்ணெய், மைதா உள்ளிட்டவற்றின் விலையை சந்தை விலையை விட குறைவான விலையில் விற்க நடவடிக்கை எடுத்தார்கள். கடுகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட 10 மளிகைப் பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கினார்கள்.

கலைஞர் கொண்டு வந்த ரூ.50 ரேஷன் திட்டம்

கருணாநிதி அவர்கள் 2007ஆம் ஆண்டு தொடங்கி வைத்த சிறப்பு பொது விநியோக திட்டம் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் சர்க்கரையின் அளவை விட கூடுதலாக வழங்க தற்போதைய அரசு ஆவன செய்ய வேண்டும். குறிப்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசின் கவனத்தை ஈர்த்து அமர்வதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இதே பிரச்சினை குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட், சிபிஐ எம்.எல்.ஏ ராமச்சந்திரன், சிபிஎம் எம்.எல்.ஏ செல்லசாமி உள்ளிட்டோரும் பேரவையில் எழுப்பினார்.

விலைவாசி உயர்வு கட்டுப்பாடு - அமைச்சர் வெங்கட்ரமணன் பதில்

இவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், ஈரான் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களிலும் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் உரிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியலை வாங்கி ஒப்பிட்டு, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இதற்காக Price Monitoring Committee ஒன்று செயல்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறது. ரேஷன் கடைகளின் மூலமாகவும் பொருட்களை குறைந்த விலையில் விற்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரும் என்று அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil