தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு தற்போது சரி செய்யப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் எஸ்.பி வேலுமணி தரப்பும் தற்போது சமரசமாக சென்றுவிட்டனர்.
இரு தரப்பும் தற்போது மீண்டும் இணைந்து இருக்கின்றனர். ஆனால் சிவி ஷண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் இன்னும் அதிமுகவில் இணையாமல் இருக்கின்றனர். மற்றபடி அதிமுகவில் ஏற்பட்ட பிளவு சரியானது.எங்களுக்குள் பிரிவு இல்லை கருத்து வேறுபாடு தான், எப்போதும் எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என எஸ்.பி வேலுமணி கூறினார்.
அதன் பிறகு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவில் அவர்கள் இணைந்தார்கள். இந்நிலையில் பிளவுபட்ட அதிமுக மீண்டும் இணைந்தது குறித்து அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார். அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுகவின் முன்னை தலைவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கழகம் மீண்டும் ஒன்றுபடத்தில் மகிழ்ச்சி.
சமீபகாலமாக என்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் அனைத்தும் பொய்த்து போனது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவங்கப்பட்டு புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களால் செழுமைப்படுத்தப்பட்ட பேர் இயக்கத்தில் பிரிவு ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சில வாடகை பேச்சாளர்கள் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்த இணைப்பு என லீமா ரோஸ் மார்ட்டின் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.
இந்நிலையில் அதிமுகவிற்குள் பிளவு ஏற்பட்ட நிலையில் அதற்கு லீமா ரோஸ் மார்ட்டின் தான் காரணம் என சிலர் பேசி வந்தனர். அவர் மீது அவதூறு பரப்பும்படி சோஷியல் மீடியாக்களில் சில கருத்துக்கள் வந்தன.ஒருவேளை லீமா ரோஸ் மார்ட்டின் தான் அதிமுகவின் பிளவுக்கு காரணமாக இருப்பாரோ ? என்ற சந்தேகம் சிலரிடம் தோன்றிவிட்டது. அந்தளவிற்கு இதுகுறித்து செய்திகள் காட்டுத்தீபோல பரவின.இந்நிலையில் அதிமுகவின் இரு பிரிவும் தற்போது ஒன்றாக இணைந்திருக்கும் நிலையில் லீமா ரோஸ் மார்ட்டின் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார்.
அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் நீங்கி மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.இதன் மூலம் என் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என லீமா ரோஸ் மார்ட்டின் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு தான் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருக்கின்றது. அதுவும் தவெகவில் தொடர்ந்து அதிமுகவினர் அடுத்தடுத்து இணைந்து வருகின்றனர்.
மூன்று எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதெல்லாம் குதிரை பேரத்தினால் தான் நடக்கின்றது என அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது குதிரை பேரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி மனு வழங்கி இருக்கின்றனர். தற்போது இந்த குதிரை பேரம் சர்ச்சை தான் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது.அதிமுக மட்டுமல்லாமல் திமுக ,அமமுக காட்சிகளை சேர்ந்தவர்களும் குதிரை பேரம் குற்றசாட்டை முன் வைக்கின்றனர். இதற்கு, எந்த வித குதிரை பெறமும் நடக்கவில்லை என தவெகவினரும் பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

