ஆகஸ்ட் மாதம், ஆங்கில நாட்காட்டியில் எட்டாவது மாதமாக வரக் கூடிய மாதமாகும். தமிழில் ஆடி-ஆவணி மாதங்கள் இணைந்த மாதமாக இருக்கும் ஆகஸ்ட் மாதம் ஆன்மீக விழாக்கள், விசேஷங்கள், விரதங்கள் ஆகியவற்றின் துவக்க மாதமாக அமைகிறது.
வரலட்சுமி விரதம், ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என இறை வழிபாட்டிற்கும், முன்னோர் வழிபாட்டிற்கும் ஏற்ற மாதமாக உள்ளது. இந்த மாதம் இறைவனை பக்தியுடன் வழிபட்டு, வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான சிறப்பான மாதமாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த விரத மற்றும் விசேஷ நாட்கள் எந்தெந்த நாட்களில் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் 2026 விசேஷங்கள் :
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | விசேஷங்கள் |
| ஆகஸ்ட் 03 | ஆடி 18 | திங்கள் | ஆடிப்பெருக்கு |
| ஆகஸ்ட் 12 | ஆடி 27 | புதன் | ஆடி அமாவாசை |
| ஆகஸ்ட் 14 | ஆடி 29 | வெள்ளி | ஆடிப்பூரம் |
| ஆகஸ்ட் 15 | ஆடி 30 | சனி | இந்திய சுதந்திர தினம் |
| ஆகஸ்ட் 16 | ஆடி 31 | ஞாயிறு | நாக சதுர்த்தி |
| ஆகஸ்ட் 17 | ஆடி 32 | திங்கள் | கருட பஞ்சமி,நாக பஞ்சமி |
| ஆகஸ்ட் 21 | ஆவணி 04 | வெள்ளி | வரலட்சுமி விரதம் |
| ஆகஸ்ட் 26 | ஆவணி 09 | புதன் | ஓணம் பண்டிகை, மிலாடி நபி |
| ஆகஸ்ட் 27 | ஆவணி 10 | வியாழன் | ஆவணி அவிட்டம் |
| ஆகஸ்ட் 28 | ஆவணி 11 | வெள்ளி | காயத்ரி ஜபம் |
| ஆகஸ்ட் 31 | ஆவணி 14 | திங்கள் | மகா சங்கடஹர சதுர்த்தி |
ஆகஸ்ட் 2026 விரத நாட்கள் :
| விரதங்கள் | ஆங்கில தேதி | கிழமை | தமிழ் தேதி |
| அமாவாசை | ஆகஸ்ட் 12 | புதன் | ஆடி 27 |
| பெளர்ணமி | ஆகஸ்ட் 27 | வியாழன் | ஆவணி 10 |
| கிருத்திகை | ஆகஸ்ட் 06 | வியாழன் | ஆடி 21 |
| திருவோணம் | ஆகஸ்ட் 26 | புதன் | ஆவணி 09 |
| ஏகாதசி | ஆகஸ்ட் 09, ஆகஸ்ட் 23 | ஞாயிறு, ஞாயிறு | ஆடி 24, ஆவணி 06 |
| சஷ்டி | ஆகஸ்ட் 04, ஆகஸ்ட் 18 | செவ்வாய், செவ்வாய் | ஆடி 19, ஆவணி 01 |
| சங்கடஹர சதுர்த்தி | ஆகஸ்ட் 02, ஆகஸ்ட் 31 | ஞாயிறு, திங்கள் | ஆடி 02, ஆவணி 14 |
| சிவராத்திரி | ஆகஸ்ட் 11 | செவ்வாய் | ஆடி 26 |
| பிரதோஷம் | ஆகஸ்ட் 10, ஆகஸ்ட் 25 | திங்கள், செவ்வாய் | ஆடி 25, ஆவணி 08 |
| சதுர்த்தி | ஆகஸ்ட் 16 | ஞாயிறு | ஆடி 31 |
ஆகஸ்ட் 2026 சுப முகூர்த்த நாட்கள் :
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | முகூர்த்தம் |
| ஆகஸ்ட் 23 | ஆவணி 06 | ஞாயிறு | வளர்பிறை முகூர்த்தம் |
| ஆகஸ்ட் 30 | ஆவணி 13 | ஞாயிறு | தேய்பிறை முகூர்த்தம் |
| ஆகஸ்ட் 31 | ஆவணி 14 | திங்கள் | தேய்பிறை முகூர்த்தம் |
ஆகஸ்ட் 2026 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :
| திதி | ஆங்கில தேதி | கிழமை | தமிழ் தேதி |
| அஷ்டமி | ஆகஸ்ட் 05, ஆகஸ்ட் 20 | புதன், வியாழன் | ஆடி 20, ஆவணி 03 |
| நவமி | ஆகஸ்ட் 06, ஆகஸ்ட் 21 | வியாழன், வெள்ளி | ஆடி 21, ஆவணி 04 |
| கரி நாட்கள் | ஆகஸ்ட் 05, ஆகஸ்ட் 19, ஆகஸ்ட் 26 | புதன், புதன், புதன் | ஆடி 20, ஆவணி 02, ஆவணி 09 |
ஆகஸ்ட் 2026 வாஸ்து நாள், நல்ல நேரம்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | வாஸ்து நல்ல நேரம் |
| ஆகஸ்ட் 23 | ஆவணி 06 | ஞாயிறு | காலை 07.23 முதல் காலை 07.59 வரை |

