தனியார் துறை ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF) என்பது மிகச் சிறந்த திட்டமாக இருக்கிறது. அது அவசர காலங்களில் மிகவும் உதவியாக இருக்கிறது.
எதிர்கால நிதி பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கிறது. முன்பெல்லாம் பிஎஃப் பணத்தை எடுப்பது சற்று சிரமமாகவே இருந்தது. விண்ணப்பிக்க சிரமங்கள் இருந் ததோடு, பணம் வருவதற்கும் அதிக நாட்கள் ஆகும்.
ஆனால் இப்போது பிஎஃப் பணத்தை எடுக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது மிகவும் எளிதாகிவிட்டது. நீங்கள் வேலையை விட்டு நின்றாலோ அல்லது அவசரத் தேவைக்காக பணம் எடுக்க நினைத்தாலோ சில எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பித்து எடுக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
பிஎஃப் பணத்துக்கு விண்ணப்பிக்க உங்களிடம் பின்வருபவை தயாராக இருக்க வேண்டும்:
உங்கள் யுனிவர்சல் கணக்கு எண் தெரிந்திருக்க வேண்டும்.
UAN உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கையில் இருக்க வேண்டும்.
உங்கள் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் UAN போர்ட்டலில் இணைக்கப்பட்டு, முதலாளியால் (Employer) அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
வங்கியின் கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு தெளிவாகத் தெரியும்படி ஒரு காசோலை லீஃப் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை
முதலில் EPFO Member Portal என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
உங்கள் UAN எண், பாஸ்வர்டு மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு 'Sign In' செய்ய வேண்டும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள மெனுவில் 'Online Services' என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் 'CLAIM (FORM-31, 19, 10C & 10D)' என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
திரையில் தோன்றும் வங்கி கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிட்டு 'Verify' கொடுக்க வேண்டும்.
பின்னர் வரும் 'Certificate of Undertaking' பக்கத்தில் 'Yes' என்பதை அழுத்த வேண்டும்.
கீழே உள்ள 'Proceed for Online Claim' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
8ஆவது ஊதியக் குழு விவகாரம்.. அரசுக்கு பறந்த கடிதம்.. பழைய பென்சன் திட்டம் முதல் பெண் ஊழியர்கள் வரை!
விண்ணப்ப வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
PF Advance (Form 31): நீங்கள் வேலையில் இருக்கும்போதே பணம் எடுக்க விரும்பினால் இதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Only PF Withdrawal (Form 19): வேலையை விட்டு நின்று 2 மாதங்களுக்குப் பிறகு முழுத் தொகையையும் எடுக்க இதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Only Pension Withdrawal (Form 10C): பென்சன் தொகையை மட்டும் எடுக்க இதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்து, பணம் எடுப்பதற்கான காரணம், தேவைப்படும் தொகை மற்றும் உங்கள் முகவரி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
உங்கள் வங்கி பாஸ்புக் அல்லது காசோலையின் ஸ்கேன் செய்த நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கடைசியாக, 'Get Aadhaar OTP' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP நம்பரை உள்ளிட்டு 'Submit' செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு கடன் வழங்கும் கிசான் கிரெடிட் கார்டு.. இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கா?
பணம் வர எத்தனை நாள் ஆகும்?
பொதுவாக, நீங்கள் விண்ணப்பித்த 7 முதல் 15 வேலை நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். பிஎஃப் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் எடுக்க விரும்பினால், உங்கள் 'Date of Exit' இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

