Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'படுதோல்வி எதிரொலி' - இந்திய டி20 அணியில் சாம்சனுக்கு புது பொறுப்பு: நள்ளிரவில் பிசிசிஐ எடுத்த முடிவு

'படுதோல்வி எதிரொலி' - இந்திய டி20 அணியில் சாம்சனுக்கு புது பொறுப்பு: நள்ளிரவில் பிசிசிஐ எடுத்த முடிவு

Samayam Tamil 1 week ago

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், கோப்பை வென்றப் பிறகு இந்திய அணியின் செயல்பாடு மோசமாக இருக்கிறது. அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகள், அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகள் என 5 போட்டிகளில், இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை.

குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், இந்திய அணி வெறும் 76 ரன்களை மட்டும் அடித்து, இறுதியில் 125 ரன்கள் வித்தியாசத்தில், வரலாற்று தோல்வியை சந்தித்திருப்பதால், இந்திய டி20 அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருக்கிறது.

இந்நிலையில், மூன்றாவது போட்டியில் படுதோல்வியை சந்தித்த உடனே, நள்ளிரவில் இணைய வழியில் பிசிசிஐ மீட்டிங் நடைபெற்றது. அப்போது, மீண்டும் அதிரடி கம்பேக்கை கொடுக்கும் வழிகள் என்னென்ன என்பது குறித்து விவாதம் செய்தார்கள். குறிப்பாக, டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், அழுத்தங்கள் நிறைந்த நேரத்திலும் அபாரமாக செயல்பட்டு, கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சனை நீக்கியது ஏன் என பிசிசிஐ நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஓபனர்களாக இருக்கும் அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரால் சிங்கில், இரண்டு ரன்களை ஓடி எடுத்து விளையாட முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் அப்போது முன் வைப்பட்டது. மேலும், பேட்டர்களில், ஷ்ரேயஸ் ஐயரை தவிர மற்றவர்கள் இடது கை பேட்டர்களாக இருப்பது குறித்தும், விவாதம் செய்திருக்கிறார்கள்.

சாம்சனுக்கு புதிய ரோல்: இந்நிலையில், இந்த விவாதத்தின்போது, சஞ்சு சாம்சனுக்கு இனி தொடர்ச்சியாக பிளேயிங் 11-ல் வாய்ப்பு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மூன்றாவது இடத்தில் இருந்து இஷான் கிஷனை நீக்கிவிட்டு, மாற்றாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்க முடிவு செய்துள்ளனர். சாம்சனால், நேரத்திற்கு ஏற்ப நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாட முடியும். மேலும், சாம்சனை சேர்ப்பதால், பேட்டிங் ஆர்டரில் வலது, இடது காம்பினேஷன் கிடைக்கும். இதனால்தான், சாம்சனுக்கு தொடர்ச்சியாக, ஒன்டவுன் இடத்தில் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

பௌலர்கள் மீது அதிருப்தி: அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணாவை ஆகியோர்தான், மெய்ண் பௌலர்களாக இருக்கிறார்கள். இருப்பினும், இவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை. இதனால், இங்கிலாந்து டி20 தொடர் முடிந்தப் பிறகு, பந்துவீச்சு படையில் மாற்றத்தை கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது.

மேலும், இனி இந்திய டி20 அணியை தேர்வு செய்வதில், தலைமை பயிற்சியாளர், கேப்டன் ஆகியோரது எந்த தலையிடும் இருக்க கூடாது எனவும், முழுக்க முழுக்க தேர்வுக்குழுவினர் மட்டுமே அணியை தேர்வு செய்ய வேண்டும் எனவும் பிசிசிஐ நிர்வாகிகள், உறுதியாக தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், டி20 அணியில் ஜூனியர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காமல், திறமையான மூத்த வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தேர்வுக்குழுவுக்கு பிசிசிஐ அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, டெஸ்ட் அணியில், முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் முடிவு செய்து, டெஸ்ட் அணியை பலவீனப்படுத்தியதுபோல், டி20 அணியையும் பலவீனப்படுத்த கூடாது என்பதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil