Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பால் உற்பத்தியாளர்களுக்கு குட் நியூஸ்..பால் கொள்முதல் விலையை ₹44 ஆக உயர்த்திய முதல்வர் விஜய் - முழு விவரம் இதோ

பால் உற்பத்தியாளர்களுக்கு குட் நியூஸ்..பால் கொள்முதல் விலையை ₹44 ஆக உயர்த்திய முதல்வர் விஜய் - முழு விவரம் இதோ

Samayam Tamil 2 weeks ago

மிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, மானியக் கோரிக்கை விவாதங்கள் இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை ஆகிய 5 முக்கியத் துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கைகள் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட உள்ளன.

பால் கொள்முதல் விலையை ₹44 ஆக உயர்வு

இந்த விவாதங்களின் முடிவில், பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த நலன்களுக்காக அந்தந்த அமைச்சர்கள் புதிய திட்டங்களையும் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்த வகையில் முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • அதில் கிராம அளவில் உள்ள தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பால் வழங்கும் 3,16,000-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், பால் கொள்முதல் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
  • கறவை மாடுகளுக்கான பசுந்தீவனம், உலா்தீவனம், தவிடு, புண்ணாக்கு மற்றும் இதர இடுபொருட்களின் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளதால், கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் எனப் பல்வேறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தன.

₹720 கோடியும் கூடுதல் செலவாகும்

  • இந்தக் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ₹41-ல் இருந்து மேலும் ₹3 உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை ₹44 ஆக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
  • கொள்முதல் விலை உயர்வால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தை அரசே ஈடுசெய்து வழங்கும். இதற்காக அரசுக்கு மாதத்திற்கு ₹60 கோடியும், ஆண்டிற்கு ₹720 கோடியும் கூடுதல் செலவாகும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

அரசின் திட்டங்களுக்கு நன்றி

இதனைத் தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் பேசுகையில் , பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கை முழக்கத்தைக் கொண்டு, குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பல்வேறு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்தார். மேலும் கடந்த 19.08.2026 அன்று பால் கொள்முதல் விலை ₹41-ஆக உயர்த்தப்பட்டது.

தற்போது இந்த கொள்முதல் விலை மீண்டும் ₹44-ஆக உயர்த்தப்பட்டு, அளித்த தேர்தல் வாக்குறுதி ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் ஆவின் நிறுவனம் மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்கும் என்று கூறினார்.

பால் உற்பத்தியாளர்கள் அடையும் பயன்கள்

  • தமிழ்நாட்டின் 3.16 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் நேரடி வருமானம் அதிகரிக்கும்.
  • கால்நடை தீவனம், பிண்ணாக்கு மற்றும் வேலை ஆட்களுக்கான கூலி உயர்வால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் குறைக்க இது உதவும்.
  • தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துவந்த நிலையில், அரசாங்கத்தின் இந்த விலை உயர்வு விவசாயிகளை மீண்டும் ஆவின் கூட்டுறவு சங்கங்களை நோக்கி ஈர்க்கும்.
  • கொள்முதல் விலையை உயர்த்தும்போது அரசிற்கு கூடுதல் மானியச் செலவோ அல்லது ஆவின் நிறுவனத்திற்கு கூடுதல் நிதிச் சுமையோ ஏற்படும்.
  • கொள்முதல் விலையை அதிகரிக்கும் போது, ஆவின் நிறுவனத்தின் நிதி நிலைமையைச் சமாளிக்க நுகர்வோருக்கு விற்கப்படும் ஆவின் பாலின் சில்லறை விற்பனை விலையையும் உயர்த்த வேண்டிய சூழல் உருவாகலாம் என்று பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil