Dailyhunt
பாமக சின்னம் விவகாரம் - ராமதாஸ் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

பாமக சின்னம் விவகாரம் - ராமதாஸ் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

Samayam Tamil 3 weeks ago

டமாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற கட்சியாக விளங்கிய பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது இரண்டு துண்டுகளாக உடைந்து நிற்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட உள்கட்சி பூசல் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது.

இதன்காரணமாக கட்சி நிர்வாகிகளும் பிரியத்துவங்கினர். பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பக்கம் நின்றது. மேலும், தேர்தல் ஆவணத்தின் அடிப்படையில் கட்சியின் சின்னம், கொடி, உள்ளிட்டவை அன்புமணியிடம் இருப்பதாகவே தெரிகிறது. இதற்கிடையில் அன்புமணியும் பாமக -வை ராமதாஸ் விருப்பம் இல்லாமலே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்தார். இதனால் கட்சியின் சின்னம் விவகாரம் பூதாகரமாக மாறியிருக்கிறது. இந்த நிலையில்தான், பாமக கட்சியின் மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாமக கட்சியின் மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

உள்கட்சி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து மார்ச் 26 -ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், சட்டத்தில் அனுமதி இருந்தால், இந்த விவகாரம் தொடர்பாக ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கலாம். அதை தேர்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தரமாதிகாரி மற்றும் ஜ்.அருள்முருகன் அடங்கிய அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் அய்யா பாமக என்ற கட்சியை துவங்கி, வி.கே சசிகலா உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு முன்னதாக ஒருவேளை பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்பட்டால் அது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

எடப்பாடியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திலேதான் சசிகலா புதிய கட்சி துவங்கினார் என பேச்சுக்கள் எழுந்தன. எடப்பாடி அதிமுக தலைமையை கைப்பற்றிய பிறகு சசிகலா முற்றிலும் தனித்துவிடப்பட்டார். அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என எவ்வளவு முயன்றாலும், அவரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ராமதாஸ் -ம் நிலையும் அப்படியே மாறியது. மகனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் அதிகாரத்தை இழந்தார். இதன் காரணமாகவே வி.கே சசிகலா மற்றும் ராமதாஸ் ஆகியோர் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளனர் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil