சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கூடிய கூட்டத்தொடரின் போது மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவை இன்று கூடியது.
இன்றைய கேள்வி நேரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
நாக தோஷம் குறித்து ஓபிஎஸ் கேள்வி
அப்போது பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பல்வேறு தொகுதிகளிலும் பாம்புகடி பாதிப்புகள் இருப்பதாக அறிகிறோம். அந்தத் தொகுதிகளுக்கு எல்லாம் 'நாக தோஷம்' இருப்பதாகவே கருதுகிறேன். எனவே பேரவைத் தலைவர் மூலமாக அமைச்சரிடம் கேட்கிறேன்; இந்த நாக தோஷத்தைக் கழிப்பதற்கு ஏதேனும் பிரார்த்தனைகள் இருந்தால் அதனை பேரவைத் தலைவர் நடத்தித் தர வேண்டும்" எனச் சிரித்தவாறே வினா எழுப்பினார்.
அறிவியல் பூர்வமான அரசு
இதற்குப் பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு முற்றிலும் அறிவியல் பூர்வமான அரசு. மூடநம்பிக்கை, தோஷம், பில்லி சூனியங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தோஷத்தில் நம்பிக்கை இருந்தால் உறுப்பினர்கள் தங்கள் சொந்த செலவில் நிவர்த்தி செய்து கொள்ளலாம். மாநிலத்தில் 'ஜலதோஷம்' தான் அதிகமாக இருக்கிறதே தவிர, பாம்புகடி தோஷம் எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை" எனக் குறிப்பிட்டார்.
பெரியார் இயக்கம் பேசிய திமுக
இதனைத் தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பெரியார் இயக்கம் பேசிய திமுக இன்று தோஷத்தைப் பற்றி பேசிட்டு இருக்காங்க. நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக, அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுகக்கூடியவர்கள் என்பதை நாங்கள் இங்கே பதிவு செய்கிறோம் என்று கூறினார்.
சட்டபேரவையில் நீடித்த சிரிப்பலை..
இதற்கு உடனே பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் கேட்டது உண்மையாகவே ஜலதோஷத்தைப் பற்றித்தான். எங்களுடைய துணைத் தலைவர் அவர்களுக்கு உண்மையாகவே ஜலதோஷம், அவர்களுக்கு நேற்று உடம்பு சரியில்லை. அதற்கும் ஒரு தீர்வு காண வேண்டும் என்றுதான் அவர் கேட்டதாக கூறினார். இதற்கு உடனே சபாநாயகர் ஜலதோஷம் இருப்பதால் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டும்.. அது உங்களுக்கு ஒத்திக்கொள்ள கூடாது . இதை நகைச்சுவையாக எடுக்கொள்ளவேண்டும் என்று கூறினார். இந்த சம்பவத்தால் சட்டபேரவையில் சிறிது நேரம் சிரிப்பலை காணப்பட்டது.
சட்டபேரவையில் அமைச்சர் வெளியிட்ட தகவல்:
- நாமக்கல், நெல்லை, வேலூர், தி.மலை, தருமபுரி, திருச்சியில் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்.
- பிற மாவட்டங்களிலும் வரும் ஆண்டுகளில் செவிலியர் கல்லூரிகள் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- நெல்லை, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல்லில் தலா 100 இடங்களும், கோவையில் 60 இடங்கள் கொண்ட கல்லூரியும் அமைக்கப்படும்.
- விழுப்புரத்தில் Regional Cancer Centre கொண்டு வரப்பட உள்ளது.
- ஆம்பூர் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்து மகப்பேறு மைய வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

