Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"பதற்றமா இருந்தது.. ஆனாலும் " சபாநாயகர் இருக்கையில் முதல் பெண்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் எம்எல்ஏ சத்யபாமா பேசியது என்ன?

"பதற்றமா இருந்தது.. ஆனாலும் " சபாநாயகர் இருக்கையில் முதல் பெண்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் எம்எல்ஏ சத்யபாமா பேசியது என்ன?

Samayam Tamil 1 week ago

மிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக சட்டப்பேரவைத் தலைவர் இருக்கையில் ஒரு பெண் அமர்ந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வுக்கு திமுக உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த தவெக எம்எல்ஏ

நேற்று மாற்று பேரவைத் தலைவராக சில நேரங்களுக்கு திருப்பூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ சத்தியபாமா நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்துசட்டப்பேரவைநிகழ்வுகளை வழிநடத்தினார். தனக்கு வழங்கப்பட்ட குறுகிய நேரத்திலும் சபையை சிறப்பாக வழிநடத்தியதாக பாராட்டுகள் குவிந்தன.

சத்தியபாமா பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்ததைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் புதிய சாதனை

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை ஆறு மாற்று பேரவைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பேரவைத் தலைவர் இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் சத்தியபாமா அந்த இருக்கையில் அமர்ந்த தருணம் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சத்தியபாமா, ஒரு பெண்ணாக தமிழக சட்டப்பேரவையின் பேரவைத் தலைவர் இருக்கையை அலங்கரித்தது தனக்கு மிகவும் முக்கியமான தருணம் என்று தெரிவித்தார்.

"இது ஒரு வரலாற்று நிகழ்வு. இந்த நாளை என் வாழ்வில் மறக்கவே முடியாது. இதற்கு முழு காரணம் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான எங்கள் தளபதி விஜய்தான்" என்று சத்தியபாமா கூறினார்.


"பதற்றம் இருந்தது.. ஆனால் வெளிக்காட்டவில்லை"

முதன்முறையாக பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்த அனுபவம் குறித்து செய்தியாளர்கள்கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சத்தியபாமா, இந்த வாய்ப்பை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதுவதாகக் கூறினார்.

அந்த இருக்கையில் அமரும்போது தனக்கு பதற்றம் இருந்ததாகவும், ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், கிடைத்த நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், தமிழகத்தில் பல்வேறு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகளில் முதல்வர் விஜய் ஈடுபட்டு வருவதாகவும் கூறிய சத்தியபாமா, "இது வெறும் ஆரம்பம்தான்" என்று குறிப்பிட்டார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil