Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பெட்ரோலில் எவ்வளவு எத்தனால்?  அனைத்து பங்கிலும் கட்டாய லேபிள் நடைமுறை - உச்சநீதிமன்றத்தில் விசாரணை?

பெட்ரோலில் எவ்வளவு எத்தனால்? அனைத்து பங்கிலும் கட்டாய லேபிள் நடைமுறை - உச்சநீதிமன்றத்தில் விசாரணை?

Samayam Tamil 1 week ago

னைத்து பெட்ரோல் நிலையங்களிலும் விற்கப்படும் பெட்ரோலில் எத்தனாலின் அளவை துல்லியமாகக் குறிப்பிடும் லேபிளிங் முறையை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிய மனுவை வரும் திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

விற்கப்படும் பெட்ரோலில் உள்ள எத்தனாலின் அளவு குறித்து ஒவ்வொரு எரிபொருள் நிரப்பும் முனையிலும் தெளிவாகவும், எளிதில் வாசிக்கக்கூடிய வகையிலும் குறிப்பிட வேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பிரசன்னா பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.

இந்த மனுவை நரேந்திர குமார் கோஸ்வாமி என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

நிபுணர் குழு அமைக்க கோரிக்கை

எத்தனால் கலந்த பெட்ரோலின் தாக்கம் மற்றும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களின் எரிபொருள் பொருத்தத்தன்மையை ஆய்வு செய்ய சுயாதீன நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இந்திய தரநிலைகள் அமைப்பு (BIS), வாகனப் பொறியாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாகனத்தின் தயாரிப்பு ஆண்டு, மாடல் மற்றும் எஞ்சின் வகைக்கு ஏற்ற எத்தனால் கலப்பு அளவு என்ன என்பது போன்ற தகவல்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரணை

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவு அதிகரித்து வரும் நிலையில், அதன் பயன்பாடு தொடர்பான தகவல்கள் நுகர்வோருக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மனு முன்வைக்கிறது.

இந்த மனு வரும் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால், பெட்ரோல் நிலையங்களில் எத்தனால் அளவை கட்டாயமாக குறிப்பிடுவது தொடர்பாக நீதிமன்றம் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது என்பது கவனம் பெற்றுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil