Dailyhunt
பிரைவேட் ஜெட்டா, காரா?, யூத் பட வெற்றிக்காக கென்னுக்கு என்ன கிஃப்ட்னு கேட்கிறாங்க, நான் வேற ஒன்னு கொடுத்தேன்: தயாரிப்பாளர்

பிரைவேட் ஜெட்டா, காரா?, யூத் பட வெற்றிக்காக கென்னுக்கு என்ன கிஃப்ட்னு கேட்கிறாங்க, நான் வேற ஒன்னு கொடுத்தேன்: தயாரிப்பாளர்

Samayam Tamil 2 weeks ago

யூத் மீட்: கென் கருணாஸின் யூத் படம் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மார்ச் 19ம் தேதி ரிலீஸான யூத் தமிழில் மட்டும் அல்ல தெலுங்கிலும் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

யூத் படத்தின் ஹீரோ மட்டும் அல்ல தயாரிப்பாளர் கருப்பையாவும் கொஞ்ச வயசு பையன் தான். கருணாஸ் மவன் படத்தை இயக்கி, நடித்து, பாடியிருக்கிறாராம். ஆரம்பத்திலேயே இவ்வளவு பொறுப்பை ஏற்றிருக்கிறாரே, படம் ஓடுமா என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் கதை நன்றாக இருந்தால் படம் நிச்சயம் ஓடும் என்பதை நிரூபித்துக் காட்டி கோலிவுட்டின் வாண்டட் இயக்குநர்களில் ஒருவராகிவிட்டார் கென் கருணாஸ்.

இந்நிலையில் சென்னையில் நடந்த யூத் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கருப்பையா கூறியதாவது, யூத் பட கதையை கேட்டுவிட்டு டீ கடைக்கு சென்றபோது கருப்பையா அண்ணனிடம் 50 ரூபாய் கூட இல்லாமல் நண்பணிடம் கேட்டார் என்று கென் சொன்னது உண்மை தான். என் நிலைமை அப்படி தான் இருந்தது. பணம் தேவைப்பாட்டால் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்க, 2 ஆயிரம் கொடுங்க என்று அம்மாவிடம் கேட்டு வாங்கி வாழ்ந்து கொண்டிருந்த உதவி இயக்குநர் நான். அப்படி இருக்கும்போது கென் என்னை நம்பி வந்தான்.

ரிலீஸ் தேதி: மார்ச் 19ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்தோம். மார்ச் மாதம் ரொம்ப டிரையானது. அதுல போய் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறீர்களா என்று கேட்டார்கள். அதே தேதியில் இரண்டு பான் வேர்ல்டு படங்கள், ஒரு பெரிய தமிழ் படமும் வருவதாக அறிவித்தார்கள். எங்களின் எதிர்பார்ப்பு குறைவாக இருந்ததால் படத்தை நம்பி வெளியிட்டோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு கிடைத்தது.

பூஜை போட்டபோதும், படப்பிடிப்பு முடிந்தபோதும், படம் ரிலீஸானபோதும் கண் கலங்கி நின்றான் கென். யூத் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிட்டது. கென் கருணாஸுக்கு ஹெலிகாப்டரா, பிரைவேட் ஜெட்டா இல்லை கார் பரிசாக கொடுக்கிறீர்களா என்று பலரும் கேட்டார்கள். படம் வெற்றி பெற்ற பிறகு இப்படி கேட்கிறார்கள். ஆனால் நானோ கென் கதையை சொன்னதுமே அவருக்கு பரிசு கொடுத்துவிட்டேன். அது தான் ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோஸ். இநத் நிறுவனத்தில் எந்த படம் செய்தாலும் இயக்குநரையும் தயாரிப்பாளராக்கி ஒரு குறிப்பிட்ட சதவீத பங்கு கொடுக்கிறோம். இயக்குநராக முயற்சி செய்து தயாரிப்பாளராக ஆகியிருக்கிறேன். அதனால் இயக்குநரின் போராட்டங்கள் எனக்கு தெரியும் என்றார்.

யூத் படத்திற்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. படத்தின் இயக்குநரும், ஹீரோவுமான கென் கருணாஸுக்கு 25 வயது தான். தயாரிப்பாளர் கருப்பையா ராமின் வயது 27. இரண்டு வாலிபர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து பலரும் சந்தேகப்பட்ட கதையை படமாக உருவாக்கி அதை பிளாக்பஸ்டராக்கி அனைவரையும் தங்களை பற்றி பேச வைத்துவிட்டார்கள்.ரொம்ப சின்ன வயசுல இந்த கென் அவசரமாக இயக்குநர் ஆவது மாதிரி இருக்கே, 27 வயது பையன் தயாரிப்பாளரா, இந்த யூத் படம் என்னவாகப் போகிறதோ என்று பேசியவர்கள் எல்லாம் தற்போது வாயடைத்துப் போய்விட்டார்கள்.

ஜி. வி. பிரகாஷ் நல்ல மனசு: யூத் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை பெரிய பலம். அந்த முட்டக்கலக்கி பாட்டுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டான்ஸ் ஆடுகிறார்கள். சூப்பர் ஹிட் இசையை கொடுக்க ஜி.வி. பிரகாஷ் குமார் சம்பளமே வாங்கவில்லை. கருப்பையா, கென்னின் நிலையை புரிந்து கொண்டு சம்பளம் வேண்டாம் தம்பிகளா என்று இலவசமாக இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். புதுமுகங்களை நம்பி அவர் செய்த இந்த காரியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
யூத் படத்தை பார்த்துவிட்டு ட்வீட் போட்டு பாராட்டினார் சிம்பு. மேலும் படக்குழுவை நேரில் அழைத்து மீண்டும் பாராட்டினார். சூர்யாவும், கார்த்தியும் யூத் படக்குழுவை சந்தித்து பாராட்டினார்கள். யூத் பட ஹீரோயின்கள் மூன்று பேருக்கும் பாராட்டுகள் வந்து குவிகிறது. முன்னதாக இந்த படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல் தவித்திருக்கிறார் கென் கருணாஸ்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil