Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிரிட்ஜில் வைத்தாலும் காய்கறி சீக்கிரம் கெடுகிறதா? காரணங்கள் மற்றும் தவிர்க்கும் வழிகள்

பிரிட்ஜில் வைத்தாலும் காய்கறி சீக்கிரம் கெடுகிறதா? காரணங்கள் மற்றும் தவிர்க்கும் வழிகள்

Samayam Tamil 1 month ago

பிரிட்ஜில் சேமிக்கும் காய்கறிகள் விரைவாக அழுகிவிடுவது பலரும் சந்திக்கும் பிரச்சனையாகும். இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள், காய்கறிகளை சேமிப்பதில் பலரும் செய்யும் தவறுகள் மற்றும் பாதுகாப்பாக சேமிக்கும் முறையை இங்கு காணலாம்

பலரும் காய்கறிகளை பிரிட்ஜில் வைத்துவிட்டால் போதும், அது நீண்ட காலத்திற்கு ஃபிரஷ்ஷாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், செடியில் இருந்து பறிக்கப்பட்ட பிறகும் காய்கறிகள் உயிரோடுதான் இருக்கின்றன.சுற்றியுள்ள காற்று மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து சிறிது சிறிதாக வாட தொடங்குகின்றன.

உலகளவில் விளைவிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் 40 முதல் 50 சதவீதம் வரை கெட்டுப்போவதால் வீணாகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காய்கறிகள் சீக்கிரம் கெட்டு போவதற்கான காரணங்களை கீழே பாருங்கள்எதிலீன் வாயு

சில காய்கறிகள் மற்றும் பழங்கள், இயற்கையாகவே 'எத்திலீன்' எனும் வாயுவை வெளியிடும். இது மற்ற காய்கறிகளையும் வேகமாகப் பழுக்க வைத்து, சீக்கிரம் அழுகச் செய்துவிடும். குறிப்பாக கீரை காய்கறிகள் விரைவாக அழுகிட வாய்ப்புள்ளது.


பாக்டீரியா, பூஞ்சை வளர்ச்சி

குளிர்ச்சியான சூழலிலும் சில பூஞ்சைகளும், பாக்டீரியாகவும் மெதுவாக வளரக்கூடும். குறிப்பாக காய்கறிகளில் ஈரப்பதம் அதிகமாக, அழுக தொடங்கும். நீர்ச்த்து நிறைந்த காய்கறிகள் பூஞ்சை வளர்வதற்கு ஏற்ற இடமாகும்.பாக்டீரியா தாக்கத்தால் கெட்ட வாடையும் வரக்கூடும்.


நீர் இழப்பு

காய்கறிகளில் அதிகளவு நீர்ச்சத்து இருக்கும். பிரிட்ஜில் இருக்கும் உலர்ந்த காற்று, காய்கறிகளில் உள்ள நீரை உறிஞ்சிவிட செய்கிறது. இதனால்தான் கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்றவை சுருங்கிப் போகின்றன.


பிரிட்ஜ் வெப்பநிலை மாற்றங்கள்

பிரிட்ஜின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வெப்பநிலையில் இருப்பது, காய்கறிகள் கெட்டுப்போவதற்கு காரணமாகிறது. கதவு பகுதி அதிக வெப்பமானது, ஷெல்ப் பகுதி அதிக குளிர்ச்சியானது. கதவை அடிக்கடி திறக்கும்போது, உள்ளே இருக்கும் குளிர்ந்த காற்று வெளியேறி வெப்பநிலை மாறக்கூடும். இவை காய்கறிகளுக்கு திடீர் அழுத்தத்தை அளித்து செல்கள் பாதித்து அழுகிட காரணமாகலாம்


காய்கறிகள் சேமிப்பதில் பலரும் செய்யும் தவறுகள்
  • காய்கறிகள் மற்றும் பழங்களை ஒன்றாக சேமித்து வைப்பது
  • காய்கறிகளை கவர் அல்லது பையில் போடாமல் திறந்தப்படி பிரிட்ஜில் வைப்பது
  • பிரிட்ஜ் கதவுப் பகுதியில் காய்கறிகளை சேமித்து வைப்பது
  • காய்கறிகளை சேமிக்கும் முன்பு கழுவுவது. இது ஈரப்பதத்தை அதிகரிக்க செய்யலாம்
  • தக்காளியை பிரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைப்பது நல்லது. பிரிட்ஜில் வைத்தால் அதன் சுவையும் தன்மையும் மாறும்.​

பாதுகாப்பாக சேமித்து வைக்க டிப்ஸ்
  • காய்கறிகள் கண்ணாடிப் பெட்டியில் அல்லது BPA-free பிளாஸ்டிக் பாக்ஸில் சேமித்து வைக்கலாம்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு தனித்தனி சேமிப்பு டிராயர் வைத்திருங்கள். இது காற்றோட்டத்தை மேம்படுத்தி கெட்டுபோவதை மெதுவாக்கும்
  • பச்சை இலை காய்கறிகளை பேப்பர் டவலில் சுற்றி சேமியுங்கள். இது அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி பூஞ்சை வளர்ச்சியை தடுக்கக்கூடும்
  • பிரிட்ஜில் அதிகமான பொருட்களை அடுக்கி வைக்க வேண்டாம். இது சீரற்ற குளிர்ச்சிக்கு வழிவகுக்ககும். நல்ல காற்றோட்டம் மிகவும் அவசியமாகும்

எனவே, பிரிட்ஜில் காய்கறிகள் சீக்கிரம் கெட்டுப்போவதற்கு பிரிட்ஜ் மட்டும் காரணமல்ல. காய்கறிகள் சுவாசிப்பது, நீர்ச்சத்து இழப்பது, ஈரப்பதம் சமநிலையின்மை, எத்திலீன் வாயு,நுண்ணுயிரி வளர்ச்சி ஆகியவை அழுகுவதை வேகப்படுத்துகின்றன.

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கவே கூடாது.

காய்கறிகள் சேமிக்கும் முறையை சரியாக கடைப்பிடித்தால் காய்கறிகளின் ஆயுட் காலத்தை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரிக்க முடியும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil