கருப்பு புகழ்: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசனின் ஃபினாலேவில் கருப்பசாமி வேடமிட்டு வந்தார் புகழ்.
அவர் வந்து நின்றதும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மெய் சிலிர்த்துவிட்டது. உடனே தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கருப்பு வேடத்தில் இருந்த புகழ் காலை தொட்டு வணங்கினார்.
நமக்கே சாமி வந்துவிடும் போல. ஒரு சில கலைஞர்களால் தான் அந்த உணர்வுகளை பார்க்கிறவர்களுக்கு கடத்த முடியும். அத்தகைய கலைஞர்களில் ஒருவர் புகழ். தியேட்டரில் நிறைய பேர் சாமி வந்து ஆடினாங்க என்று சொல்வார்கள். எங்களால் அங்கு உட்கார முடியவில்லை. கண் முன்பு கருப்பசாமி வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது என்று கையெடுத்து கும்பிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ். அதற்கு கருப்பு படத்தில் வந்த கருப்பனே பாடலை ஒலிக்க விட்டிருந்தார்கள்.
பிக் பாஸிலும் கருப்பு: புகழை பார்த்து மற்ற நடுவர்களும் இம்பிரஸ் ஆகிவிட்டார்கள். மாதம்பட்டி ரங்கராஜ் பேசியதை கேட்டு புகழ் கண் கலங்கிவிட்டார். கருப்பசாமியை பார்த்த பார்வையாளர்கள் கூறியிருப்பதாவது, இந்த நிகழ்ச்சிக்கு கருப்பசாமியை அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன?. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் எவிக்ஷன் காக்கும் சாமி என கருப்பசாமியை காட்டியிருக்கிறீர்கள் என்று பார்த்தால் இங்குமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை எவிக்ஷனில் இருந்து காக்க கருப்பசாமியிடம் வேண்டினால் நடக்கும்என ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டார்கள். அதில் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றும் சாமி என்கிற வாசகத்தை பார்த்த பார்வையாளர்கள் கடுப்பாகி விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கருப்பு படம் ஹிட்டானதும் அந்த சாமியை எவிக்ஷனுக்காக பயன்படுத்துவது சரியில்லை பிக் பாஸ். சாமி விவகாரத்தில் அதுவும் கருப்பசாமியிடம் சேட்டை வேண்டாம் என்றார்கள்.
டைட்டிலை வென்ற சம்யுக்தா: குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் காதல் திருமணம் செய்த சம்யுக்தா, அனிருத்தா ஸ்ரீகாந்த் தான் டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார்கள். வின்னர்களை அறிவித்ததும் அதை கேட்ட சந்தோஷத்தில் மனைவியை தூக்கி அந்த இடத்தை ஒரு சுற்று சுற்றினார் அனிருத்தா. இந்த ஜோடி ரொம்ப ஜாலியான ஜோடி என்று பெயர் எடுத்த நிலையில் டைட்டிலும் கிடைத்திருக்கிறது.
எனக்கு சமைக்க தெரியாது என்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதுவும் மாதம்பட்டி ரங்கராஜிடமே உண்மையை சொன்னார் அனிருத்தா ஸ்ரீகாந்த். சமைக்க தெரியாத ஆளை இங்கு அழைத்து வந்தது உங்கள் வேலையா என மாதம்பட்டி கேட்க ஆமாம் என்றார் சம்யுக்தா. கணவருடன் தான் வரணும் என்று ரூல்ஸ் போட்டதால் அனியை அழைத்து வந்தேன் என்று கூறினார் சம்யுக்தா. இந்நிலையில் சமையல் தெரியாமல் வந்து டைட்டிலை வென்றுவிட்டார் அனிருத்தா.
ஃபன் ஜோடி: சம்யுக்தாவுக்கு மட்டும் அல்ல அனிருத்தாவுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.சமைத்துக் கொண்டிருந்தபோது சம்யுக்தாவை அனிருத்தா ஸ்ரீகாந்த் கலாய்க்க அவரோ, இரண்டாவது கல்யாணம் மூனாவதாக ஆக்கிடாத அனி என்று எச்சரித்தார்.அதற்கு அனிருத்தாவோ, உங்களுக்கு மட்டும் என்ன இது ஃபர்ஸ்ட் இல்ல செகண்ட் இன்னிங்ஸ் தானே மேடம் என்று பதிலுக்கு கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

