Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புரட்டாசி மாத அதிர்ஷ்ட ராசி பலன்: சூரியனைப் போல இந்த 5 ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்க போகிறது

புரட்டாசி மாத அதிர்ஷ்ட ராசி பலன்: சூரியனைப் போல இந்த 5 ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்க போகிறது

Samayam Tamil 3 days ago

சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடிய காலத்தை புரட்டாசி மாதம் என தமிழில் அழைக்கப்படுகிறது.

செப்டம்பர் 17 ஆம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். அக்டோபர் 17ஆம் தேதி வரை அங்கு சென்று இருக்கக்கூடிய நிலையில், கன்னி ராசி அதிபதியான புதன் ஆட்சி பெற்று அவருடன் சேர்ந்து சந்திப்பதால் புதாதித்யா ராஜயோகம் உருவாகிறது. இந்த மாதத்தில் எந்தெந்த ராசிகள் மிகவும் பயனடைவார்கள் என தெரிந்து கொள்வோம்.


நவகிரகங்களின் அரசனான சூரிய பகவான் செப்டம்பர் 17ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7:12 மணிக்கு, தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். அது மட்டும் இல்லாமல் கன்னி ராசி அதிபதியும், நவகிரகங்களின் இளவரசன் ஆனால் புதன் அங்கு ஆட்சி பெற்று சென்றிருப்பதால் இரண்டு கிரகங்களும் சேர்ந்து அற்புத யோக பலனை தர உள்ளனர். இந்த யோக பலனின் தாக்கம் 12 ராசிகள் மீது சிறப்பானதாக இருந்தாலும், சில ராசிகளுக்கு பல்வேறு விதத்தில் நன்மையும் லாபத்தையும் தரக்கூடியதாக அமைய உள்ளது. கன்னி ராசியில் சூரியனின் பெயர்ச்சியான் எந்த 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.சிம்ம ராசி

சிம்ம ராசி அதிபதியான சூரிய பகவான், உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் பெயர்ச்சியாக கூடிய காரணத்தால், உங்களுடைய மன தைரியமும், உங்கள் திறமையும் அதிகரிக்கும். வேலை தேடக்கூடிய நபர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் நேர்காணலில் வெற்றி கிடைக்கலாம். நிர்வாகம் தொடர்பான பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய திட்டமிட்ட செயல்பாடுகள் நல்ல வெற்றியை தரும். பயணங்கள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த அனுகூல பலன்களை பெறுவீர்கள்.

உங்களுடைய பணிகளில் வெற்றியும் அதன் மூலம் நிதி சார்ந்த முன்னேற்றமும் அடைவீர்கள். மேலும் இந்த காலத்தில் நீங்கள் மேற்கொள்ள கூடிய எந்த ஒரு சுப காரியங்களும் திட்டமிட்டபடி முடிக்க முடியும்.
சூரியனின் அருளைப் பெற, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழைகளுக்கு அல்லது தேவைப்படுபவர்களுக்குப் பழங்களை தானம் செய்வது நன்மை பயக்கும்.


கன்னி ராசி

கன்னி ராசி சூரிய பகவானின் சஞ்சாரம் நடக்கக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் பல்வேறு விதத்தில் நன்மைகளை அடைவீர்கள். குறிப்பாக சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமையை நிரூபிக்கவும், நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் நீங்கள் நிதிநிலை தொடர்பாக வலுவாக இருப்பீர்கள்.

உங்கள் வேலை தொடர்பாக திறமையை நிரூபிக்க முடியும். உங்கள் வாழ்க்கை துணையின் உணர்வுகளை மதிப்பளித்து செயல்பட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்திலும் பணியிடத்திலும் எந்தவித மோதலையும் தவிர்ப்பது நன்மை தரும். உங்களுடைய உடல் நலம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடையும்.
இந்த மாதத்தில் சூரிய பகவானின் நல்ல அருள் பெற தினமும் காலையில் அவருக்கு அர்க்கியம் கொடுக்கவும்.


விருச்சிக ராசி

விருச்சிக ராசி அன்பர்களுக்கு நவ கிரகங்களின் தலைவன் சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால், உங்களுடைய எல்லா விதமான செயல்பாடுகளிலும் லாபம் கிடைக்கும். குறிப்பாக சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் சில சிரமங்கள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்க முடியும். தொழில் தொடர்பான கூட்டணிகள் மூலம் பயனடைவீர்கள்.

நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் நன்மை தரும். தாராளமான பணம் வரவு இருக்கும். பிறரிடம் முடங்கிக் கிடக்கக்கூடிய திரும்ப கிடைக்கலாம். நண்பர்களுடைய அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குறிப்பாக மூத்த உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்களின் ஆதரவை பெறுவீர்கள்.திருமணம் தொடர்பான முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
சூரியனின் அருளைப் பெற, சூரிய பகவானுக்கு நீர் அர்க்கியம் அளிக்கவும்.


தனுசு ராசி

தனுசு ராசி அன்பர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி காரணமாக நன்மைகளும் பல்வேறு நல்ல செய்திகளும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு கர்ம ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்ததாக இருக்கும். நீண்ட நாட்களாக வீடு, வாகனம் போன்ற சொத்து வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு அது கைகூடும்.

இந்த மாதத்தில் உங்களுடைய அந்தஸ்து, நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அதன் மூலம் லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியின் நிலவு கூடியதாக இருக்கும். சூரியனின் அருள் காரணமாக ஆரோக்கியம் மேம்படும்.
சூரியனின் அருளைப் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பது நன்மை பயக்கும்.


மீன ராசி

மீன ராசி அன்பர்களுக்கு மிகவும் சிறப்பான பலன் கிடைக்கக்கூடிய காலம். மேலும் இந்த காலத்தில் உங்களுடைய அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த நபர்களுக்கு, இந்த புரட்டாசி மாதத்தில் அங்கீகாரமும், புதிய பொறுப்புகள் அல்லது பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

தந்தையிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்கும். சூரியனின் தாக்கம் காரணமாக நிதிநிலை முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய சேமிப்பு கணேசமான அளவுக்கு இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை இடம் இருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள்.
சூரியனின் அருள் பெற வெல்லத்தை தானமாக வழங்கவும்

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் முற்றிலும் உண்மையானவை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. விரிவான தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணரை அணுகவும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil