Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புதுச்சேரியில் முதல்வருக்கு அதிகாரம் இல்லை..இங்கே ஆல் இன் ஆல்  ஆளுநர் தான் : தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்

புதுச்சேரியில் முதல்வருக்கு அதிகாரம் இல்லை..இங்கே ஆல் இன் ஆல் ஆளுநர் தான் : தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்

Samayam Tamil 1 month ago

மிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரப்புரை செய்து வரும் முக ஸ்டாலின் தற்போது புதுச்சேரியிலும் தனது பரப்புரையை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடர்வது போல புதுச்சேரியிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் தொடர்கின்றது. ஆனால் அங்கு என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி தான் ஆட்சியில் இருக்கின்றனர்.

கடந்த முறையை போல இம்முறையும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது என்ற முடிவை எடுத்துள்ளார். சமீபத்தில் கூட பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்து வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து தற்போது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்காக பரப்புரை செய்துள்ளார்

அந்த பரப்புரையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியையும் கடுமையாக விமர்சித்தார் முக ஸ்டாலின். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை விமர்சித்து பேசினார் முக ஸ்டாலின். அதாவது தமிழகத்தில் பாஜகவின் அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கின்றார். அதைப்போல தான் புதுச்சேரியில் ரங்கசாமியும் என பேசினார் முதல்வர்.

மேலும் பிஹாரில் நிதிஷ்குமாருக்கு வந்த நிலை புதுச்சேரியில் ரங்கசாமிக்கு வராது என்பதில் என்ன நிச்சயம் ? பாஜகவுடன் கூட்டணி வைத்தால் இதே நிலை தான். ரங்கசாமியை எப்போது ? எப்படி கவிழ்க்கலாம் என்ற சிந்தனையில் தான் பாஜக இருக்கின்றனர். தற்போது புதுச்சேரியை ஆளுபவர்கள் இந்த மாநிலத்தை அழிவு பாதையை நோக்கி நகர்த்திவிட்டனர். புதுச்சேரி இவர்களால் தன் பாரம்பரியத்தை இழந்து வருகின்றது.

இதனை சரி செய்யவே தான் ஜகத் ரக்ஷகன் அவர்களை அனுப்பி வைத்தேன். அவரும் நான் எதற்காக புதுச்சேரிக்கு அவரை அனுப்பினேனோ அந்த பணியை சிறப்பாக செய்தார். புதுச்சேரியின் பாரம்பரியத்தை மீட்க கடுமையாக உழைத்து வருகின்றார். அதன்படி என்.ஆர் காங்கிரஸ்மற்றும் பாஜகவின் ஆட்டத்தை தடுக்கும் வகையில் ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்

புதுச்சேரியை அழிவில் இருந்து காக்க இந்த கூட்டணி உருவாகியிருக்கிறது. புதிய விடியலை நோக்கி புதுச்சேரி நகர்ந்து வருகின்றது. புதுச்சேரியை வளர்ச்சியடைய செய்ய வேண்டும். குறிப்பாக புதுச்சேரியை மாநிலமாக்க வேண்டும் என்பது தான் இங்குள்ள மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். ஆனால் ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை. மேலும் புதுச்சேரியில் முதல்வருக்கு மரியாதை இல்லை.

இங்கே அனைத்தும் ஆளுநர் தான். ஆளுநரின் கட்டுப்பாட்டில் தான் அனைத்தும் உள்ளது. ஆளுநர் மூலம் ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்திருக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக -காங்கிரஸ் கூட்டணியை வெற்றிபெற செய்யுங்கள். புதுச்சேரிக்கு விடியல் வரும் நேரம் வந்துவிட்டது என பேசினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். இவ்வாறு புதுச்சேரியிலும் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு புதுவை முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்திருக்கின்றார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்.

இந்நிலையில் புதுச்சேரியில் ஆளும் கட்சியின் கூட்டணிக்கு இடையே சலசலப்பு இருந்து வருவதாகவே தெரிகின்றது. அவ்வப்போது ஆளுநருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த தேர்தலில் கூட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணித்ததாக கூட சொல்லப்பட்டது.



இதுபோல பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ரங்கசாமி தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தொடர்கிறார். குறிப்பாக ஆளும் கட்சியாக ரங்கசாமி இருப்பதாலும், அவருக்கு மக்களின் செல்வாக்கு அதிகம் என்பதாலும் இம்முறை புதுச்சேரியில் ரங்கசாமியை பின்னுக்கு தள்ளி திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா ? என்பது தான் கேள்வி. கண்டிப்பாக ஆட்சியை பிடிக்கும் என்பது தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் நம்பிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil