தமிழ் ஆண்டின் முதல் மாதமாக வரும் சித்திரை மாதம், சூரிய பகவான் மேஷம் ராசியில் தனது பயணத்தை மேற்கொள்ளும் மாதமாகும்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அதற்கு இணையாக கோவில்கள் பலவற்றிலும் விழா எடுத்து கொண்டாடும் முக்கிய மாதமாகும். குறிப்பாக காவல் தெய்வங்கள், பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக சித்திரை மாதம் கருதப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சித்திரை விழா நடைபெறும் மாதமாகும். அட்சய திருதியை போன்ற விசேஷங்கள் வருவதால் இது பெருக்கத்திற்கான மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் எந்தெந்த விசேஷங்கள், விரத நாட்கள் எந்தெந்த நாட்களில் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சித்திரை 2026 விசேஷங்கள் :
| ஆங்கில மாதம் | தமிழ் மாதம் | கிழமை | விசேஷங்கள் |
| ஏப்ரல் 14 | சித்திரை 01 | செவ்வாய் | தமிழ் புத்தாண்டு |
| ஏப்ரல் 20 | சித்திரை 07 | திங்கள் | அட்சய திரிதியை |
| ஏப்ரல் 21 | சித்திரை 08 | செவ்வாய் | ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி |
| ஏப்ரல் 26 | சித்திரை 13 | ஞாயிறு | ஸ்ரீ வாசவி ஜெயந்தி |
| ஏப்ரல் 28 | சித்திரை 15 | செவ்வாய் | மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் |
| ஏப்ரல் 30 | சித்திரை 17 | வியாழன் | நரசிம்மர் ஜெயந்தி, கள்ளழகர் எதிர்சேவை |
| மே 01 | சித்திரை 18 | வெள்ளி | தொழிலாளர் தினம், சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் |
| மே 04 | சித்திரை 21 | திங்கள் | அக்னி நட்சத்திரம் ஆரம்பம் |
| மே 11 | சித்திரை 28 | திங்கள் | திருநாவுக்கரசர் குருபூஜை |
சித்திரை 2026 விரத நாட்கள் :
| விரதங்கள் | ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | |
| அமாவாசை | ஏப்ரல் 17 | சித்திரை 04 | வெள்ளி | |
| பெளர்ணமி | மே 01 | சித்திரை 18 | வெள்ளி | |
| கிருத்திகை | ஏப்ரல் 19 | சித்திரை 06 | ஞாயிறு | |
| திருவோணம் | மே 09 | சித்திரை 26 | சனி | |
| ஏகாதசி | ஏப்ரல் 27,மே 13 | சித்திரை 14,சித்திரை 30 | திங்கள்,புதன் | |
| சஷ்டி | ஏப்ரல் 22,மே 07 | சித்திரை 09,சித்திரை 24 | புதன்,வியாழன் | |
| சங்கடஹர சதுர்த்தி | மே 05 | சித்திரை 22 | செவ்வாய் | |
| சிவராத்திரி | ஏப்ரல் 15 | சித்திரை 02 | புதன் | |
| பிரதோஷம் | ஏப்ரல் 15, ஏப்ரல் 29 | சித்திரை 02,சித்திரை 16 | புதன்,புதன் | |
| சதுர்த்தி | ஏப்ரல் 20 | சித்திரை 07 | திங்கள் |
சித்திரை 2026 சுப முகூர்த்த நாட்கள் :
| ஆங்கில மாதம் | தமிழ் மாதம் | கிழமை | முகூர்த்தம் |
| ஏப்ரல் 16 | சித்திரை 03 | வியாழன் | தேய்பிறை முகூர்த்தம் |
| ஏப்ரல் 20 | சித்திரை 07 | திங்கள் | வளர்பிறை முகூர்த்தம் |
| ஏப்ரல் 23 | சித்திரை 10 | வியாழன் | வளர்பிறை முகூர்த்தம் |
| ஏப்ரல் 30 | சித்திரை 17 | வியாழன் | வளர்பிறை முகூர்த்தம் |
| மே 08 | சித்திரை 25 | வெள்ளி | தேய்பிறை முகூர்த்தம் |
| மே 13 | சித்திரை 30 | புதன் | தேய்பிறை முகூர்த்தம் |
| மே 14 | சித்திரை 31 | வியாழன் | தேய்பிறை முகூர்த்தம் |
சித்திரை 2026 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :
| திதி | ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை |
| அஷ்டமி | ஏப்ரல் 24, மே 09 | சித்திரை 11,சித்திரை 26 | வெள்ளி,சனி |
| நவமி | ஏப்ரல் 25, மே 10 | சித்திரை 12,சித்திரை 27 | சனி,ஞாயிறு |
| கரி நாட்கள் | ஏப்ரல் 19, ஏப்ரல் 28 | சித்திரை 06,சித்திரை 15 | ஞாயிறு,செவ்வாய் |
சித்திரை 2026 வாஸ்து நாள், நல்ல நேரம் :
| ஆங்கல தேதி | தமிழ் தேதி | கிழமை | வாஸ்து நல்ல நேரம் |
| ஏப்ரல் 23 | சித்திரை 10 | வியாழன் | காலை 08.54 முதல் 09.30 வரை |

