Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
CSK - பேட்டிங் வரிசை இப்படிதான் இருக்கணும்: சிஎஸ்கே நிர்வாகத்திடம் தெரிவித்த தோனி? விபரம் இதோ

CSK - பேட்டிங் வரிசை இப்படிதான் இருக்கணும்: சிஎஸ்கே நிர்வாகத்திடம் தெரிவித்த தோனி? விபரம் இதோ

Samayam Tamil 5 days ago

டந்த மூன்று ஐபிஎல் சீசன்களிலும், பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.

இதற்கு, பேட்டிங் வரிசையும் மிகமுக்கியமானதாக இருக்கிறது.

குறிப்பாக, கடந்த மூன்று சீசன்களிலும் 170 ரன்களை கூட சேஸ் செய்ய முடியவில்லை. பவர் பிளே, டெத் ஓவர்களில் அதிரடி காட்டும் அளவுக்கு, சிஎஸ்கே பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இதனால், ஐபிஎல் 2027 சீசனுக்கு முன் பலவீனங்களை சரி செய்து, மிரட்டலான பேட்டிங் வரிசையுடன் செல்ல வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போன்ற அணிகள் ஆக்ரோஷமான பேட்டிங் வரிசையை வைத்திருப்பதால்தான் தொடர்ச்சியாக அபாரமாக செயல்படுகிறார்கள். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸும் ஆக்ரோஷமான பேட்டிங் வரிசையை கட்டமைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மகேந்திரசிங் தோனி, ''பேட்டிங் வரிசையை, எக்காரணம் கொண்டும், பலவீனமாக கட்டமைக்க கூடாது. அதே நேரத்தில், எல்லா பேட்டர்களும் அதிரடியாகவும் ஆடும் வகையில் இருக்க கூடாது. ஓபனர்களாக சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் இருக்க வேண்டும். இருவராலும், பவர் பிளேவில் அதிரடி ஆட்ட முடியும்''

''பிறகு, மூன்றாவது இடத்தில் ஆடும் பேட்டர், பெரிய இன்னிங்ஸை ஆடும் வகையில் இருக்க வேண்டும். அடுத்து, உர்வில் படேல், ஷிவம் துபே ஆகியோர் இருக்க வேண்டும். இப்படி, முதல் 5 இடங்களுக்கு பிறகு 2 தரமான பினிஷர்கள் வேண்டும். அதில் ஒருவர் முழுநேர பேட்டராகவும், ஒருவர் ஆல்ரவுண்டர் பினிஷராகவும் இருந்தால் நன்றாக இருக்கும். இப்படிதான் அணியை கட்டமைக்க வேண்டும். 2 பினிஷர்களையும் டிரேடிங்கில், ஏலத்தில்தான் வாங்கியாக வேண்டும்'' என தோனி ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிஎஸ்கே டார்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸிடம் பேசி அசுதோஷ் சர்மாவை வாங்க முயற்சித்து வருகிறது. மாற்றாக, டிவோல்ட் பிரேவிஸை டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் எதிர்பார்க்கும் நிலையில், இதுகுறித்து தீவிர பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், கடந்த மூன்று ஐபிஎல் ஏலத்திலும் சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார்கள். முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியாமல் தடுமாறினார்கள். பிறகு, பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா போன்றவர்களை தலா 14 கோடிக்கு வாங்கி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.

இப்படி ஏலத்தில் படுமோசமாக சொதப்பியதால்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், ஏலத்திலும் சிஎஸ்கே சொதப்பி, தரமான வீரர்களை வாங்கவில்லை என்றால், ஐபிஎல் 2027 சீசனிலும் சிஎஸ்கே படுமோசமாக சொதப்பும். இதனால், அணியின் மதிப்பும் பெரிய அளவில் சரியும்.

ஆகையால், சிஎஸ்கேவுக்கு இதுதான் கடைசி சான்ஸாக பார்க்கப்படுகிறது. இதை மிஸ் செய்து, சிஎஸ்கே சொதப்பி, தோனியும் ஓய்வு பெற்றுவிட்டால், சிஎஸ்கே டம்மி அணி லிஸ்டில் சேர்ந்துவிடும். முன்பு சொதப்பிய ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள், தற்போது ஸ்டார் அணிகள் அந்தஸ்தை பெற்றுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil