சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் லீக் போட்டியில் படுமோசமாக பேட்டிங் ஆடியது. சிஎஸ்கேவில், பந்துவீச்சு வரிசையைவிட பேட்டிங் வரிசைதான் அபாரமாக இருந்தது.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 127 ரன்களை மட்டும் அடித்து சொதப்பினார்கள்.
காரணம் என்ன? கடந்த சீசனில் ஆயுஷ் மாத்ரே, ஓபனராக விளையாடி தொடர்ச்சியாக ரன்களை குவித்தார். ஆனால், இம்முறை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஓபனர் இடத்திற்கு சென்று, ஆயுஷ் மாத்ரேவை ஒன்டவுன் இடத்திற்கு தள்ளினார். இந்த மாற்றம் ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால், மீண்டும் ஆயுஷ் மாத்ரேவுக்கு ஓபனர் இடத்தையும், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஒன்டவுன் இடத்தையும் கொடுக்க மகேந்திரசிங் தோனி முடிவு செய்துள்ளார்.
ஷிவம் துபேவுக்கு புது பொறுப்பு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஷிவம் துபே 7ஆவது இடத்தில் பேட்டிங் ஆடினார். இனி மிடில் வரிசையில் 5ஆவது இடத்தில் ஆட வேண்டும் என தோனி முடிவு செய்துள்ளார். துவக்கத்தில் மிதமான அதிரடி ஆட்டத்தையும், பிறகு அதிரடியாகவும் விளையாடும் வகையில்தான், 5ஆவது இடம் இருக்கும். இதனால், இனி ஷிவம் துபே முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட மாட்டார். துவக்கத்தில் சற்று நிதானமாகவும், பிறகு பினிஷராகவும் இரண்டு பணிகளையும் செய்ய உள்ளார்.
டிவோல்ட் பிரேவிஸ் இடம்: முதல் லீக் போட்டியின்போது, காயம் காரணமாக அவதிப்பட்ட டிவோல்ட் பிரேவிஸ், முழு பிட்னஸை எட்டிவிட்டதால், இரண்டாவது போட்டியில் 4ஆவது இடத்தில் பேட்டிங் ஆட உள்ளார். துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டும் என்பதுதான் இவரது பணி.
இப்படி, முதல் 5 புது பேட்டிங் வரிசையை தோனி தேர்வு செய்துள்ளார். சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, கேப்டன் ருநுராஜ் கெய்க்வாட், டிவோல்ட் பிரேவிஸ், ஷிவம் துபே ஆகிய அனுபவமிக்க 5 பேட்டர்கள் இருப்பார்கள். பிறகு, அனுபவமற்ற சர்பரஸ் கான், கார்த்திக் சர்மா ஆகியோர் பேட்டர்களாக இருப்பார்கள் என தோனி முடிவு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது இரண்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து விளையாட உள்ளது. இப்போட்டி, ஏப்ரல் 3ஆம் தேதி சென்னையில், இரவு 7:30 மணிக்கு துவங்கும்.
அடுத்து, ஏப்ரல் 5ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக பெங்களூரில் விளையாடுவார்கள். இப்போட்டியும், இரவு 7:30 மணிக்குதான் துவங்கும்.
இப்படி, அடுத்தடுத்து பலமிக்க அணிகளுக்கு எதிராக சிஎஸ்கே விளையாட உள்ளதால், சிஎஸ்கே பேட்டர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருவேளை, இந்த இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே படுமோசமாக சொதப்பி, தோற்றால் அது நிச்சயம் கடும் விமர்சனத்தை பெறும்.
ஏற்கனவே, கடந்த சீசனில் தொடர்ச்சியாக படுமோசதாக சொதப்பி 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, 10ஆவது இடத்தை பிடித்து சொதப்பினார்கள். இம்முறையும், இதேபோல் சொதப்பினால், சிஎஸ்கேவுக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்துவிடும். இதனால், ஐபிஎல் 2026 சீசனில் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

