கடந்த சீசனைப் போலவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தனர்.
இந்நிலையில், நான்காவது போட்டியில், டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக வலுவான பிளேயிங் 11-யை தேர்வு செய்ய மகேந்திரசிங் தோனி முடிவு செய்துள்ளார். இதில், ருதுராஜ் கெய்க்வாட், நூர் அகமது ஆகியோருக்கு பிளேயிங் 11-ல் இடம் கொடுக்கப்படவில்லை.
ஓபனர்கள் இடம்: ஓபனர்களாக சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் இடம்பெறுவார்கள். இதில், ஆயுஷ் மாத்ரே ஒருசில ஓவர்களையும் வீச வேண்டும் எனவும் அவரிடம் தோனி தெரிவித்துள்ளார்.
மிடில் வரிசை: இதனைத் தொடர்ந்து, மூன்றாவது இடத்தில், கேப்டன் ருதுராஜ் கெய்காவ்ட ஆடுவார். ஒருவேளை, நான்காவது போட்டியிலும் ருதுராஜ் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவரை நீக்கிவிட்டு மாற்றாக உர்வில் படேலை அணியில் இணைக்க தோனி முடிவு செய்துள்ளார். இது நடந்தால், கேப்டன் பொறுப்பு சாம்சனுக்கு செல்லும்.
நல்ல பார்மில் இருக்க கூடிய சர்பரஸ் கானை நான்காவது இடத்திலும், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள டிவோல்ட் பிரேவிஸை 5ஆவது இடத்திலும் ஆட வைக்க தோனி திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, பிரேவிஸை 1-2 ஓவர்களை வீசவைக்கவும் முடிவு செய்துள்ளார்கள். அடுத்து, ஷிவம் துபே, உர்வில் படேல் ஆகியோர் இருப்பார்கள். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன், 8ஆவது இடத்தில் என 6, 7, 8 ஆகிய இடங்களில் பினிஷர்கள் இருப்பார்கள்.
நூர் அகமது, முதல் மூன்று போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், இம்முறை அகில் ஹோசைனை சேர்க்க முடிவு செய்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக குர்ஜாப்னித் சிங், அன்ஷுல் கம்போஜ் ஆகியோரும், இம்பாக்ட் வீரராக கலீல் அகமதவும் இருப்பார்.
இந்த புது பிளேயிங் 11 அபாரமாக செயல்படவில்லை என்றால், கடந்த சீசனைப் போலவே, இம்முறையும் சில வீரர்களை இடைப்பகுதியில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர். கடந்த சீசனில், அப்படிதான் ஆயுஷ் மாத்ரே, டிவோல்ட் பிரேவிஸ் ஆகியோர் சிஎஸ்கேவுக்கு கிடைத்தனர். தற்போதும், அதேபோல் சில வீரர்களை அணிக்குள் கொண்டுவர சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.
4ஆவது போட்டிக்கான சிஎஸ்கே உத்தேச 11: ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன்,ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சர்பரஸ் கான், டிவோல்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, உர்வில் படேல், ஜேமி ஓவர்டன், அகில் ஹோசைன், குர்ஜப்னித் சிங், அன்ஷுல் கம்போஜ். இம்பாக்ட் வீரர் - கலீல் அகமது.
அடுத்த போட்டி எப்போது? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது 4ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இப்போட்டி, வரும் ஏப்ரல் 11ஆம் தேதி, சென்னையில் இரவு 7:30 மணிக்கு துவங்கும். இப்போட்டிக்கு இன்னமும் சில நாட்கள் இருப்பதால், அதற்குள் புது பிளேயிங் 11-க்கு தீவிர பயிற்சியை கொடுத்து, அபாரமாக செயல்பட திட்டங்களை வகுக்க உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் மூன்று லீக் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், அடுத்து பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோற்றனர். அடுத்து, மூன்றாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர்.

