சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனைப் போலவே தற்போதும் படுமோசமாக சொதப்பி வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் படுதோல்விகள்தான் கிடைத்துள்ளது.
புள்ளிப் பட்டியலில், 10ஆவது இடத்தைவிட்டு மேலே வர முடியவில்லை.
நிர்வாகம் அதிருப்தி: இந்நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை அழைத்துப் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள், கேப்டன்ஸி குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக, கடந்த சீசனில் மூன்று போட்டிகளில் ஆடினாலும், அதில் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில், இரண்டு முறை 30+ ரன்களை குவித்த உர்வில் படேலுக்கு இம்பாக்ட் வீரர் இடத்தில் கூட ஏன் இடம் கொடுக்கவில்லை என நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
அதில், ''அதிக தொகைக்கு எடுத்துவிட்டோம் என்பதற்காக, தொடர்ச்சியாக சொதப்பும் கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் ஆகியோருக்கு ரெகுலராக இடம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கடந்த சீசனில், சிறப்பாக விளையாடிய உர்வில் படேலுக்கு ஏன் இம்பாக்ட் வீரர் இடத்தில் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. நூர் அகமது சொதப்புவதால், அகில் ஹோசைனுக்கு ஒரு போட்டியிலாவது வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டாமா? வேகப்பந்து வீச்சாளர்களை சுழற்ச்சி முறையில் பயன்படுத்தி, வேகப்பந்து வீச்சின் பலவீனத்தை உடனே சரி செய்திருக்க வேண்டாமா? கேப்டனாக என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள். இனியும் இதேபோல் தவறு நடக்க கூடாது'' என நிர்வாகம், ருதுராஜை எச்சரித்துள்ளது.
உர்வில் படேல் ரன்கள்: 29 வயது விக்கெட் கீப்பர் பேட்டரான உர்வில் படேலுகுக கடந்த சீசனில் 3 போட்டிகளில்தான் வாய்ப்பு கிடைத்தது. இதில், 212.50 ஸ்ட்ரைக் ரேட்டில் 68 ரன்களை குவித்தார். குறிப்பாக, இரண்டு போட்டிகளில் 30+ ரன்களை எடுத்தார். கேகேஆர் அணிக்கு எதிராக 11 பந்துகளில் 31 ரன்களையும், குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிராக 19 பந்தில் 37 ரன்களையும் குவித்து அசத்தினார். ஆனால், இவருக்கு இம்முறை முதல் மூன்று போட்டிகளில் இம்பாக்ட் வீரர் இடத்தில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நிர்வாகம் செக்: இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு சிஎஸ்கே நிர்வாகம் கெடு விதித்துள்ளது. நான்காவது போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக செயல்பட்டு ரன்களை குவித்து திறமையை நிரூபிக்கவில்லை என்றால், 5ஆவது போட்டியில் இருந்து ஓபனர்களாக சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரேவும், ஒன்டவுன் இடத்தில் உர்வில் படேலும் விளையாடுவார் என ருதுராஜுக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. ருதுராஜ் வெளியேறினால், கேப்டன் பொறுப்பு சாம்சனுக்கு சென்றுவிடும்.
அபாரமாக செயல்பட வேண்டும்: முதல் மூன்று போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 3 போட்டிகளில் 113.89 ஸ்ட்ரைக் ரேட், 13.67 சராசரியில் 41 ரன்களைதான் எடுத்துள்ளார். இதில், 3 பவுண்டரி, ஒரேயொரு சிக்ஸர் மட்டுமே இருக்கிறது. இதன்மூலம், ருதுராஜ் கெய்க்வாட் பார்ம் அவுட்டில் இருப்பது தெளிவாக தெரிகிறது. இதனால், அடுத்த போட்டியிலும் ருதுராஜ் சொதப்பினால், அடுத்து இவருக்கு சிஎஸ்கே பிளேயிங் 11-ல் வாய்ப்பே கிடைக்காது என்ற நிலைமைதான் இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது நான்காவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இப்போட்டி, வரும் ஏப்ரல் 11ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

