Dailyhunt
CSK: 'ருதுராஜுக்கு கடைசி சான்ஸ்'.. மீண்டும் சொதப்பினால்.. மாற்றாக 179 ஸ்ட்ரைக்கில் ஆடும் பேட்டரை சேர்க்க முடிவு!

CSK: 'ருதுராஜுக்கு கடைசி சான்ஸ்'.. மீண்டும் சொதப்பினால்.. மாற்றாக 179 ஸ்ட்ரைக்கில் ஆடும் பேட்டரை சேர்க்க முடிவு!

Samayam Tamil 1 week ago

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் மூன்று போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இதனால், ஏப்ரல் 11ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள நான்காவது போட்டியில், சிஎஸ்கே அணி அபார வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஒருவேளை, இப்போட்டியிலும் சிஎஸ்கே தோற்று, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்படவில்லை என்றால், 5ஆவது போட்டிக்கு முன் ருதுராஜ் கெய்க்வாட்டை பிளேயிங் 11-ல் இருந்து வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நிர்வாகம் அதிருப்தி: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், களத்தில் வீரர்களை உற்காசப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது கிடையாது என்ற விமர்சனம் இருக்கிறது. மேலும், பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். கேப்டனாக, பொறுப்புடன் பேட்டிங் ஆட முடியவில்லை. முதல் மூன்று போட்டிகளிலும் 113.89 ஸ்ட்ரைக் ரேட், 13.47 சராசரியில் 41 ரன்களைதான் எடுத்துள்ளார்.

இது, மிகமிக மோசமான ரெக்கார்ட்டா இருக்கிறது. ஒருவேளை, நான்காவது போட்டியிலும் இதேபோல் மோசமாக பேட்டிங் ஆடி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே தோற்கும் பட்சத்தில், ருதுராஜ் கெய்க்வாட்டை வெளியேற்றிவிட்டு, மாற்றாக உர்வில் படேலை ஒன்டவுன் இடத்தில் ஆட வைக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

உர்வில் படேல் பார்ம்: இதுவரை 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் உர்வில் படேல், அதில் 212.50 ஸ்ட்ரைக் ரேட், 22.67 சராசரியில் 68 ரன்களை எடுத்துள்ளார். மொத்தம் 57 டி20 போட்டிகளில் 179.47 ஸ்ட்ரைக் ரேட், 26.89 சராசரியில் 1,425 ரன்களை சேர்த்துள்ளார். இதில், 3 சதம், 4 அரை சதங்களும் அடங்கும். இப்படி, முரட்டு பார்மில் இருக்கும் உர்வில் படேலுக்கு, இனி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஒருவேளை, ருதுராஜ் கெய்க்வாட் நான்காவது போட்டியில் அபாரமாக செயல்பட்டு அசத்தும் பட்சத்தில், உர்வில் படேலை பினிஷர் ரோலில், கார்த்திக் சர்மாவுக்கு மாற்றாக விளையாட வைப்பார்கள். ருதுராஜ் சொதப்பினால், உர்வில் படேல், 3ஆவது இடத்திற்கு வந்துவிடுவார். சாம்சனுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படும்.

அணியின் மதிப்பு சரிவு: கடந்த சீசனில், 10 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டும் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் 10ஆவது இடத்தைதான் பிடித்தது. தற்போதும், முதல் மூன்று போட்டிகளில் விளையாடி, 10ஆவது இடத்தில்தான் இருக்கிறார்கள். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு சரிவை சந்திக்க ஆரம்பித்துள்ளது. ஒருவேளை, ஐபிஎல் 2026 சீசனோடு தோனி ஓய்வுபெற்றுவிட்டால், அணியில் மதிப்பு மேலும் சரிவை சந்திக்கும். இதனால், ஐபிஎல் 2026 சீசனில், இனி வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று, அதிரடி கம்பேக்கை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது.

சாம்சனின் சேப்பாக்கம் ரெக்கார்ட்: சென்னை சேப்பாக்கத்தில், சஞ்சு சாம்சன் இதுவரை மொத்தம் 7 டி20 போட்டிகளில் விளையாடி, அதில் 111.11 ஸ்ட்ரைக் ரேட், 12.86 சராசரியில் 90 ரன்களைதான் அடித்துள்ளார். ஒரு போட்டியில், அதிகபட்சமாக 26 ரன்களைதான் சேர்க்க முடிந்துள்ளது. இப்படி, சேப்பாக்கத்தில் சாம்சனின் ரெக்கார்ட் மோசமாக இருப்பதால், இனி வரும் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு, தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சாம்சன் இருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil