Dailyhunt
CSK: 'தோனி இனி விளையாட மாட்டாரா?'.. பேர்வெல் போட்டி இருக்கா? இல்லையா? சிஎஸ்கே நிர்வாகம் பதில்!

CSK: 'தோனி இனி விளையாட மாட்டாரா?'.. பேர்வெல் போட்டி இருக்கா? இல்லையா? சிஎஸ்கே நிர்வாகம் பதில்!

Samayam Tamil 4 days ago

கேந்திரசிங் தோனி, ஐபிஎல் 2026 சீசனோடு ஓய்வுபெறுவார் என, நடப்பு சீசன் துவங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

மேலும், தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இயக்குநர் காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஆனால், சிஎஸ்கே இதுவரை விளையாடிய 9 போட்டிகளிலும் தோனி விளையாடவே இல்லை. முதல் போட்டிக்கு முன்பு, தசை பிடிப்பு பிரச்சினை காரணமாக அவதிப்பட்ட அவர், தற்போது வரை ஆடவில்லை. இருப்பினும், பயிற்சியின்போது சிறப்பாக விளையாடுகிறார். அப்போது, அவருக்கு தசைபிடிப்பு பிரச்சினை இருப்பதுபோல் தெரியவில்லை. இதனால், தோனி சைலண்டாக ஓய்வு பெற்றுவிட்டாரா, இனி விளையாட மாட்டாரா, அவருக்கு பேர்வெல் போட்டி இருக்குமா என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்: இந்நிலையில், மகேந்திரசிங் தோனி எஞ்சிய 5 போட்டிகளிலும் விளையாடுவார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் இருந்து தோனி விளையாட உள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். தோனி அணிக்குள் வந்தால் சர்பரஸ் கானை வெளியேற்ற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.. ஆனால், இவர் கடந்த போட்டியில் ஆடவே இல்லை. மாற்றாக, கடந்த போட்டியில் கார்த்திக் சர்மா களமிறங்கி, அரை சதம் அடித்தார். இருப்பினும், 40 பந்தில் 54 ரன்களைதான் எடுக்க முடிந்தது. இதனால், இவரை நீக்கிவிட்டு, தோனியை ஆட வைக்க வாய்ப்புள்ளது.

பிளே ஆப் வாய்ப்பு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 9 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அடுத்த 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு இருக்கும் என்பதால், சிஎஸ்கேவுக்கு அடுத்த 5 போட்டிகளிலும் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. சிஎஸ்கே கடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டனர். இதனால், சிஎஸ்கே கடைசி நேரத்தில், 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று பிளே ஆப் முன்னேறவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

தோனி எந்த இடத்தில் ஆடுவார்? மகேந்திரசிங் தோனி, பினிஷிங் ரோலில் ஆடவே அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஜேமி ஓவர்டனுக்கு பிறகு 7ஆவது இடத்தில் தோனி விளையாட வாய்ப்புள்ளது. கடைசி 2 ஓவர்கள் இருக்கும்போது மட்டுமே தோனி களிமறங்குவார்.

மகேந்திரசிங் தோனி, கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி, 13 போட்டிகளில் 196 ரன்களை அடித்தார். ஸ்ட்ரைக் ரேட் 135.17ஆக இருந்தது. இதில், 12 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன்பிறகு, கிட்டதட்ட ஒரு வருடமாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல் இருந்துவிட்டு தற்போது ஆட வருகிறார். இதனால், தோனி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபிஎலில், டெத் ஓவர்களில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 151.72ஆக இருக்கிறது. இது கடைசி சீசன் என்பதால், தோனி குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினாலும் கூட, தோனி ஆடினாலே போதும் என்ற நிலையில்தான் ரசிகர்கள் இருக்கிறார்கள். தோனி, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில்தான் ஓய்வு பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil