Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டாய்லெட் சுத்தம் செய்ய பேக்கிங் சோடா - வினிகர் கலவை எப்படி பயன்படுத்தலாம்?

டாய்லெட் சுத்தம் செய்ய பேக்கிங் சோடா - வினிகர் கலவை எப்படி பயன்படுத்தலாம்?

Samayam Tamil 4 months ago

டாய்லெட் சுத்தம் செய்ய பல வீடுகளில் கடுமையான ரசாயனங்களைக் கொண்ட கிளீனர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை கிருமியை திறம்பட அழிக்க பயன்பட்டாலும், ரசாயன வாசனை மற்றும் புகை சிலருக்கு சிரமத்தை தரலாம்.

அதற்கு சிறந்த இயற்கை மாற்றாக பேக்கிங் சோடா - வினிகர் காம்போ கருதப்படுகிறது. ஆனால், உண்மையிலே பலன் அளிக்கிறதா? எந்த சூழலில் பயன்படுத்தலாம்? போன்றவற்றை பார்க்கலாம்

இந்த காம்போ எப்படி வேலை செய்கிறது

பேக்கிங் சோடா

இதன் வேதிப்பொருள் சோடியம் பை கார்பனேட். லேசான காரத்தன்மை மற்றும் மைல்டு அப்ரசிவ் கொண்டது. விடாப்பிடியான கறைகளை நீக்க பயன்பெறும்

வினிகர்

இந்த கரைசலில் சுமார் 5 சதவீதம் அசிட்டிக் அமிலம் உள்ளது. இது கடின நீர் படிவங்கள், சோப்பு மிச்சங்கள், சுண்ணாம்பு படிவம் போன்றவற்றை மெதுவாக கரைக்க உதவும்.



இவை இரண்டும் சேரும்போது கார்பன் டை ஆக்சைடு குமிழிகள் உருவாகும். அவை டாய்லெட் மேற்பரப்பில் உள்ள அழுக்கை தளரச் செய்கிறது. சில நிமிடங்களில் அமிலமும் காரமும் ஒன்றை ஒன்று சமநிலைப்படுத்திக் கொள்கின்றன

குறிப்பு: இது சக்தி வாய்ந்த கிளீனராக கருதப்படவில்லை. லேசான கறைகளை சுத்தம் செய்திடவே பயனுள்ளதாக கருதப்படுகிறது

எந்த வகை கறைகளுக்கு பயன்படுத்தலாம்?

  1. கடின நீர் படிவங்கள்
  2. சுண்ணாம்பு குவியல்
  3. மஞ்சள் வளைய கறைகள்



வினிகர் கால்சியம் கார்பனேட்டை கரைக்க உதவுவதால், கடின நீர் பயன்பாடு பகுதிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

டாய்லெட் துர்நாற்றத்தை குறைக்குமா?

பேக்கிங் சோடா வாசனையை மறைக்காது. ஆனால், அமிலத் தன்மை கொண்ட வாசனை மூலக்கூறுகளை நடுநிலையாக்கிறது. இதனால் செயற்கை வாசனை இன்றி புத்துணர்ச்சி உணர்வு கிடைக்கலாம்.

பயன்படுத்தும் முறை

ஸ்டெப் 1: முதலில் 1 அல்லது 2 கப் வினிகரை டாய்லெட் பவுலில் ஊற்றி 20 முதல் 30 நிமிடங்கள் அப்படியே விடவும்

ஸ்டெப் 2: அதன் மேல் 1 கப் பேக்கிங் சோடா தூவ வேண்டும்

ஸ்டெப் 3: 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு பிரஷ் கொண்டு ஸ்க்ரப் செய்யவும்

ஸ்டெப் 4: இப்போது டாய்லெட் ஃப்ளஷ் செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்



பாதுகாப்பு குறிப்புகள்

  • இந்த காம்போ தீவிர கிருமியை அழிப்புக்கு மாற்றாக பயன்படுத்த முடியாது
  • வீட்டில் யாருக்காவது தொற்று, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை இருந்தால், கிருமிநாசினி கிளீனர் பயன்படுத்துவது சிறந்தது
  • வினிகருடன் ப்ளீச் கலப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை ஆபத்தான வாயுவை உருவாக்கும்

இதனை வீடுகளில் விரும்புவது ஏன்?

  • குறைந்த செலவு
  • கடுமையான ரசாயன வாசனை கிடையாது
  • குழந்தைகள்- செல்லப்பிராணிகள் இருக்கும் வீடுகளுக்கு ஏற்றது
  • செப்டிக் டேங்க்-க்கு பாதுகாப்பானது
  • சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது

எப்போது பயன்படுத்தலாம்?

டாய்லெட்டில் லேசான கறை மற்றும் துர்நாற்றத்தை நீக்கிட தாராளமாக பயன்படுத்தலாம். வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய ஏற்றது.

ஆனால், வலுவான கிருமிகளை அழிக்க உதவியாக இருக்காது. அச்சமயத்தில் அங்கீகரிக்கப்பட்ட கிளீனர் பயன்படுத்துவது பாதுகாப்பானது

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil