Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டெங்கு காய்ச்சல் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்

டெங்கு காய்ச்சல் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்

Samayam Tamil 1 week ago

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் முதலாம் ஆண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது மாணவர்கள் சிலர் எங்களது பட்டமளிப்பு விழாவிற்கும் நீங்கள் தான் வர வேண்டும் என்று கூறியதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.

அதாவது அடுத்த ஐந்து ஆண்டுகளும் தவெக ஆட்சி தொடர்ந்து மீண்டும் தவெக ஆட்சிதான் அமைய வேண்டும் என்பதுதான் மாணவர்களின் விருப்பமாக உள்ளதாக கூறினார்.

நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் - அமைச்சர் அட்வைஸ்

நீட் மிகவும் கடினமான தேர்வாக தான் உள்ளது. கொள்கை ரீதியாக அதனை எதிர்த்தாலும், இப்போது தேர்வு உள்ளதால் அதற்கு கடுமையாக படிக்க வேண்டிய சூழல் உள்ளது. கடினமாக உழைத்து படித்த பின், கிடைக்கும் வெற்றி என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் என்று அமைச்சர் அருண்ராஜ் மாணவர்களிடையே பேசினார்.என் வாழ்நாளில், மருத்துவ கல்லூரியில் நுழைந்த முதல் நாள் மறக்க முடியாத ஒன்று என்று பேசிய அமைச்சர் அருண்ராஜ், அமைச்சராக இருந்தாலும், நான் மருத்துவர் என்பது தான் எனக்கு எப்போதும் பெருமையான விஷயம் என்றார். மருத்துவ துறை என்பது, புனிதமான மற்றும் மனநிறைவு அளிக்க கூடிய ஒன்று என்று மாணவர்களிடம் உற்சாகமூட்டினார்.

டெங்கு காய்ச்சல் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது

கடந்த ஆண்டு அக்டோபர் வரை 25,585 பேர் டெங்கு காய்ச்சலால்பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 23,241 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து 3 முறை முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்தி என்னென்ன துறைகள் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

பணி நியமனத்திற்கு லஞ்சம் கேட்டால் நடவடிக்கை

பணி நியமனம் உள்ளிட்ட எதிலாவது லஞ்சம் கேட்டால் உடனடியாக கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் அருண்ராஜ், வெளிப்படை தன்மையுடன் பணி வழங்கப்படுவதாக கூறினார். யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும், புகார் கொடுப்பவர்கள் அடையாளம் ரகசியம் காக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். மாவட்ட அளவில் தன்னிச்சையாக யாரும் முடிவெடுத்து பணி நியமனம் செய்ய முடியாது என்றும் அந்த அளவிற்கு விதிகள், முறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், எங்கேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அருண் ராஜ் எச்சரித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil