Dailyhunt
எக்ஸிட் போல் பற்றி மீட்டிங்கில் பேசியது என்ன.. விஜய்யை சந்தித்த பின் தவெக வேட்பாளர் சொன்ன விஷயம்

எக்ஸிட் போல் பற்றி மீட்டிங்கில் பேசியது என்ன.. விஜய்யை சந்தித்த பின் தவெக வேட்பாளர் சொன்ன விஷயம்

Samayam Tamil 1 week ago

மிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு இன்னமும் மூன்று நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையில் நேற்றைய தினம் எக்ஸிட் போல் ரிசல்ட்கள் வெளியாகி அரசியல் களத்தில் பல விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுடன் இன்று விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் எனவும், எதிர்கட்சி இடத்தில் அதிமுக இருக்குமெனவும் தெரிவித்தன. அதே நேரம் திமுக, தவெக இடையில் தான் போட்டி என விஜய் தொடர்ந்து தனது பரப்புரையில் பேசி வந்த நிலையில், அவருடைய கட்சி இந்த தேர்தலில் 15 முதல் 20 இடங்களை மட்டுமே கைப்பெற்றும் என எக்ஸிட் போல் ரிசல்ட்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஒரேயொரு நிறுவனம் மட்டும் தவெக 120 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைவர் விஜய் பனையூரில் வைத்து சந்தித்துள்ளர். இந்த ஆலோசனைக்கு பின்பாக ஆர்.கே. நகர் தொகுதி தவெக வேட்பாளர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எக்ஸிட் போல் குறித்து மீட்டிங்கில் எதுவும் பேசப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதுக்குறித்து மரிய வில்சன் பேசுகையில், விஜய் பொதுமக்களை சந்தித்தது, அவர்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்பதை வேட்பாளர்களிடம் பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கு தயாராக இருக்கீங்களா என்றும் கேள்வி எழுப்பினார் என்றார் மரிய வில்சன். தொடர்ந்து அவரிடம் எக்ஸிட் போல் பற்றி எதுவும் பேசப்பட்டதா என்று கேட்டதற்கு, அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. ஏற்கனவே மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள்.

இந்த கருத்துக்கணிப்பு பற்றியெல்லாம் கவலை இல்லை. மே நான்காம் தேதி எல்லாமே தெரிய வரும் என்றார். மேலும் விஜய் தேர்தல் அனுபவம் பற்றி கேட்டு அறிந்ததாகவும், காலையில் ஆறு மணிக்கெல்லாம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்கு போக சொல்லி இருப்பதாகவும் கூறினார் மரிய வில்சன். அதோடு எவ்வளவு கூட்டம் இருந்தாலும் முன்னாடி நின்று வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டுமென விஜய் ஆலோசனை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் தவெக வேட்பாளர்களிடம் நாம் அனைவரும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் விஜய் தெரிவித்துள்ளார். அதோடு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உடனடியாக பனையூருக்கு கிளம்பி வர வேண்டும். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என உத்தரவு போட்டுள்ளார் விஜய். தேர்தல் முடிவுக்கு பின்பாக தங்களது கட்சி வெற்றி வேட்பாளர்களை பிற கட்சியினர் தங்கள் பக்கம் இழுப்பதற்கு முயற்சி செய்யலாம் என்பதற்காக விஜய் இந்த அறிவுரையை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தவெகவுக்கு 10 முதல் 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது குறித்து செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். இதுப்பற்றி அவர் கூறுகையில், விசில் புரட்சி நடக்கப்போவது உறுதி. தவெக 200 இடங்களை கைப்பற்றும் எனவும் நம்பிக்கையுடன் அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil