திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பாக இனிகோ இருதயராஜ் போட்டியிடுகின்றார். கடந்த முறையும் திருச்சி கிழக்கில் இவர் தான் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இம்முறையும் திமுக சார்பாக இனிகோ இருதயராஜ் திருச்சி கிழக்கில் போட்டியிடுகின்றார். இதனைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி குறித்து அமைச்சர் கே.என் நேரு பேசியிருக்கிறார்.
அவர் கூறுகையில், கிழக்கு என்றாலே சூரியன் தானே. திருச்சி கிழக்கிலும் உதய சூரியன் உதிப்பது உறுதி. திமுகவின் பாரம்பரியமான தொகுதிகளில் திருச்சி கிழக்கும் ஒன்று. எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் கூட திருச்சி கிழக்கு திமுக வசம் தான் இருந்தது. 1977 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி எம்.ஜி.ஆர் அவர்கள் வெற்றிபெற்றார்.
ஆனால் அப்போது கூட திருச்சி கிழக்கில் திமுக தான் வெற்றிபெற்றது என்றார் கே.என் நேரு. இந்நிலையில் கே.என் நேருவின் இந்த கருத்தை தொடர்ந்து அதிமுகவின் ஆதரவாளர்கள் திருச்சி கிழக்கு தொகுதியின் வரலாற்றை அலசி ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த முறை 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக திருச்சி கிழக்கில் வெற்றிபெற்றது.
ஆனால் அதற்கு முந்தைய இரண்டு தேர்தல்களில் அதிமுக தான் வெற்றிபெற்றுள்ளது என்கின்றனர். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவின் வெல்லமண்டி நடராஜன் இங்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக போட்டியிட்ட மனோகரன் வெற்றிபெற்றார். எனவே இதனை குறிப்பிட்ட அதிமுகவினர் திமுக போல தாங்களும் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளோம் என கூறி வருகின்றனர்.
ஆனால் இம்முறை திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய்போட்டியிடுகின்றார். முதல்வர் வேட்பாளரான விஜய் இங்கு போட்டியிடுவதால் இம்முறை திருச்சி கிழக்கு தொகுதி மேலும் கவனம் ஈர்த்துள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகின்றார். எனவே தான் இந்த தொகுதி மேலும் இம்முறை கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிகின்றது.
அதுமட்டுமல்லாமல் திமுக சார்பாக இங்கு போட்டியிடும் இனிகோ இருதயராஜ் வெளிப்படையாக விஜய்க்கு சவால் விட்டுள்ளார். அந்தளவிற்கு இனிகோ இருதயராஜ் நம்பிக்கையாக இருக்கின்றார் என்றே தெரிகின்றது. ஏனென்றால் திருச்சி கிழக்கு தொகுதியில் இனிகோ இருதயராஜ் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக உள்ளார். மக்கள் எளிதில் அணுகக்கூடிய சட்டமன்ற உறுப்பினராக அவர் இருப்பதால் அவரின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கணிக்கப்படுகின்றது
அதே சமயம் 2011 மற்றும் 2016 என இருமுறை அதிமுகதிருச்சி கிழக்கில் வெற்றிபெற்றுள்ளனர். மேலும் தவெக தலைவர் விஜய்க்கும் இங்குள்ள சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது. எனவே இம்முறை திருச்சி கிழக்கில் திமுக -அதிமுக மற்றும் தவெக என மூன்று கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் திமுகவினர் மற்றவர்களை விட கூடுதலான நம்பிக்கையில் இருக்கின்றனர். 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற இனிகோ இருதயராஜ் இந்த தொகுதியில் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார் என தெரிகின்றது. அதன் காரணமாக திமுக திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தவரை நம்பிக்கையாக உள்ளது. அதே சமயம் தவெக தலைவர் விஜய் திமுகவின் வாக்குகளை பிரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக தான் ,திருச்சி கிழக்கு தொகுதி கவனத்தை ஈர்க்கும் தொகுதிகளிகள் ஒன்றாக மாறியிருக்கின்றது.

