அதிமுகவினர் அடுத்தடுத்து தவெகவில் இணைவது தான் தற்போது ஹாட் டாபிக்காக இருந்து வருகின்றது. முதலில் தேர்தல் முடிவிற்கு பிறகு அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு அதில் ஒரு தரப்பினர் தவெகவிற்கு ஆதரவு வழங்கினார்கள்.
பிறகு தவெகவிற்கு சட்டமன்றத்தில் நடைபெற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு வழங்கிய எஸ்.பி வேலுமணி தரப்பிற்கு அமைச்சரவையில் இடம் தரலாம் என்ற பேச்சு எழுந்தது. உடனே இதெல்லாம் குதிரை பேரம் தான். அதிமுக எம்எல்ஏக்களை விலை கொடுத்து தவெக வாங்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.
அதன் பிறகு பிளவுபட்ட அதிமுக மீண்டும் இணைந்ததை தொடர்ந்து அதில் சிவி ஷண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் மட்டும் இன்னும் இணையாமல் இருக்கின்றனர். அவர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யலாமா ? என யோசித்து வருகின்றனர். மறுபக்கம் அடுத்தடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இது குறித்து ஆதவ் அர்ஜுனாபேசுகையில், எங்களை தேடி வருவோர்களை அன்புடன் இணைத்துக்கொள்கின்றோம். நாங்கள் யாருக்கும் எந்த ஆபர் ரும் வழங்கவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து இணைவது குறித்து இன்பதுரை எம்பி சோஷியல் மீடியாவில் தன் கருத்தினை பதிவு செய்திருக்கின்றார்.
அவர் பதிவிட்டது என்னவென்றால், தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசியல் முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மரபுக்கும் முதலமைச்சர் விஜய்யின் மரபுக்கும் நடக்கும் யுத்தமாகும். அதிமுகவின் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்து அதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்கி எம்ஜிஆர் legacy ஐ முடிவிற்கு கொண்டு வர முதலமைச்சர் விஜய் முயற்சிக்கின்றார். ஆனாலும் இறுதியில் எம்ஜிஆர் தான் வெல்வார் என அதிமுக எம்பி இன்பதுரை பதிவிட்டு இருக்கின்றார்.
இவர் ஆரம்பம் முதலே தவெக குதிரை பேரம் நடத்தி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதுபோல செயல்களில் ஈடுபட்டு அதிமுக எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்து அதிமுக என்ற கட்சியை அழிக்க நடக்கும் திட்டம் என தொடர்ந்து பேசி வந்தார் இன்பதுரை எம்பி. இதையடுத்து தற்போது எம்ஜிஆர் மரபை அழிக்கவே முதலமைச்சர் விஜய் இப்படி செய்கின்றனர் என பதிவிட்டு இருக்கின்றார்.
இந்நிலையில் தவெகவினரை இதுகுறித்து கேட்கும்போது அவர்கள் அதிமுக தலைமையை தான் குறை சொல்கின்றனர். அதிமுக தலைமை சரியில்லை, எதிரிகளான திமுக உடனே கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க நினைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதனை பொறுக்காத அதிமுகவின் உண்மையான தொண்டர்களும் நிர்வாகிகளும் எங்களுடன் இணைகின்றனர். 47 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்சியை பிடிக்க நினைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அதனை எதிர்த்தவர்கள் அது பிடிக்காதவர்கள் எங்கள் பக்கம் வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் 90 % அதிமுகவினர் தவெகவில் இணைவார்கள் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். இந்நிலையில் அதிமுக மற்றும் தவெக இடையே தான் தற்போது பிரச்சனை போய்க்கொண்டு இருக்கின்றது. அதிமுகவில் இருந்து மூன்று எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துகொண்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
இதனால் இன்னும் மூன்று தொகுதிகளில் மீண்டும் தேர்தல் வரும். இதன் காரணமாக மக்களின் பணமும் நேரமும் தான் வீணாகும் என பலர் சொல்கின்றனர். இதனை முதலமைச்சர் விஜய் ஆதரிக்க கூடாது எனவும் பலர் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதற்கிடையில் மேலும் இன்னும் சில அதிமுகவினர் தவெகவில் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

