Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ENG vs PAK 2nd Test - இங்கிலாந்து மெகா வெற்றி: இனி, இவங்களுக்கு WTC பைனல் வாய்ப்பு எப்படி? புள்ளி விபரம்

ENG vs PAK 2nd Test - இங்கிலாந்து மெகா வெற்றி: இனி, இவங்களுக்கு WTC பைனல் வாய்ப்பு எப்படி? புள்ளி விபரம்

Samayam Tamil 1 week ago

ங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில், முதல் போட்டியில் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி, லண்டனில் துவங்கியது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து, இறுதியில், 194 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, இத்தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினார்கள்.

இப்படி, இரண்டு வெற்றிகளை பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில், இங்கிலாந்து அணி, 34.40 சதவீத புள்ளிகளை பெற்று 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை 15 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றிகள், 8 தோல்விகள், ஒரு டிராவை சந்தித்துள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற வேண்டும் என்றால், இங்கிலாந்து அணி, இனி அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வென்றாக வேண்டும்.

போட்டிகள் என்னென்ன? பாகிஸ்தானுக்கு எதிராக, இன்னமும் ஒரு டெஸ்ட் போட்டி எஞ்சியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து விளையாடும். இத்தொடர், வரும் டிசம்பர் 17ஆம் தேதி துவங்கும். இதனைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டு துவக்கத்தில், நியூசிலாந்து செல்லும் இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இப்படி, அடுத்த 7 போட்டிகளிலும் வென்றாக வேண்டும்.

அப்போதுதான், இங்கிலாந்து அணி, மொத்தம் 22 டெஸ்ட் போட்டிகளில், 13 வெற்றிகள், 8 தோல்விகள், ஒரு டிராவுடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை இருக்கிறது.

பாகிஸ்தான் அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 16.670 சதவீத புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த அணிக்கு, பைனல் வாய்ப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு, வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடர் கிடையாது. இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், அடுத்து நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டி போட்டிகள் இருக்கிறது.

தற்போதுவரை, 8 போட்டிகளில் 6 தோல்விகளை பெற்று, 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளனர். அடுத்து, 5 டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது. இந்த 5-ல் வென்றாலும், 7 வெற்றிகள் 6 தோல்விகளுடன்தான் இருப்பார்கள். பைனலுக்கு முன்னேற, சராசரியாக 65 சதவீத புள்ளிகள் வேண்டும் என்பதால், பாகிஸ்தான் அணி, கிட்டதட்ட வெளியேறிவிட்டதாகவே கருதப்படுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 9ஆம் தேதி துவங்கும். இப்போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தால், இந்த அணியால் அதிகபட்சமாகவே 50 சதவீத புள்ளிகளை மட்டுமே பெற முடியும் என்பதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பினை பாகிஸ்தான் அணி, உறுதியாக இழந்துவிடும்.

தற்போதைக்கு, ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலின் ஒரு இடத்தை பிடித்துவிட்டதாகவே கருதப்படுகிறது. எஞ்சிய ஒரு இடத்திற்கு கடும் போட்டி நிலவும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil