Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லட்டுமா.. பேசாதீங்கன்னா பேசாதீங்க: டென்ஷன்னான சபாநாயகர்

என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லட்டுமா.. பேசாதீங்கன்னா பேசாதீங்க: டென்ஷன்னான சபாநாயகர்

Samayam Tamil 3 weeks ago

ட்டமன்றம் ஒருநாள் விடுமுறைக்கு பின்பாக இன்று மீண்டும் கூடியுள்ளது. நேற்று முன்தினம் பேரவையில் திமுக மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து அவையில் நடந்த களேபரங்கள் குறித்து சபாநாயகர் தன்னுடைய வருத்ததினை பதிவு செய்தார். இந்நிலையில் இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் சட்டமன்றம் கூடியுள்ள நிலையில் அதிமுகவை சார்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியை, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் எச்சரித்துள்ளார்.

சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தற்போது அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். அதோடு அவை முன்னவராகவும் அவர் இருந்து வரும் நிலையில், சட்டமன்றத்தில் அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

செங்கோட்டையன் கிண்டல்

இந்நிலையில் இன்றைய தினம் அதிமுகவின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில் அவை முன்னவரான செங்கோட்டையன் இடையில் புகுந்தார். அவர் லெட்டர் பேட் வைத்து பேசி கொண்டிருக்க, செங்கோட்டையன் இடைமறித்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் லெட்டர் பேடை நான் பார்த்தேன். அவர் இடம் மாறி இருக்கிறார். ஆனாலும் படம் மாறவில்லை என்று சொல்லி அமர்ந்தார். மறுபடியும் செங்கோட்டையன் எழுந்து உங்கள் லெட்டர் பேட் பின்பக்கமாக பார்த்தோம்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

அதில் ஓபிஎஸ்ஸின் படம் இருக்கிறது. அவர் இடம் மாறி இருக்கிறார். ஆனாலும் படம் மாறவில்லை என மீண்டும் கிண்டல் அடித்தார். அதற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிலளிக்க எந்திரிக்க, சபாநாயகர் வேணாம் உட்காருங்க என்றார். இதெல்லாம் லைட் வெயிட்ல எடுத்துகோங்க என சமாதானம் செய்தார். ஆனாலும் அதிமுகவை சார்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேச வர, இதை அனுமதிக்க முடியாது. உங்களுடைய கருத்தை மட்டும் சொல்லுங்கள்.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் டென்ஷன்

சில விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு விட்ருங்க. உட்காருங்க. ஒன்றொன்றுக்கும் உட்கார்ந்து பதில் சொல்லிவிட்டு இருப்பீங்க என்றார். தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இபிஎஸ் தலைமையில் நாங்கள் உறுதியுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மரியாதைக்குரிய எங்களின் மூத்த அண்ணன் செங்கோட்டையன் இடம் மாறி இருந்தால் கூட என பேச முற்பட்டார். இதனால் சபாநாயகர் டென்ஷனாகி இடை மறித்தார்.

அப்போ என்ன நடந்துச்சுன்னு நான் விளக்கம் சொல்லட்டுமா. எல்லா மக்களுக்கும், இந்த மன்றத்துக்கும் என்ன நடந்ததுன்னு சொல்லட்டுமா? பேசாதீங்கன்னா, அதற்கு மேல் பேசாதீங்க. வேண்டாம் விட்ருங்க என்றார். இதனையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி வனத்துறை சம்பந்தமான சில கோரிக்கைகளை பேசவிட்டு அமர்ந்து விட்டார். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன.

அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்ட வரவேண்டுமென வலியுறுத்தின. தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினை அடுத்து இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil