ஐபிஎல் 2026 சீசனின் 9ஆவது லீக் போட்டியில், முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 210/6 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி, 20 ஓவர்களில் 204/8 ரன்களை மட்டும் எடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
1.ஜெய்ஷ்வால் கேட்ச் மிஸ்: ராஜஸ்தான் அணி ஓபனர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால், 2.5ஆவது பந்தில் ஒரு கேட்சை கொடுத்தார். ஆனால், அதனை விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் பிடிக்கவில்லை. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 36 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 55 ரன்களை குவித்து அசத்தினார். ஜெய்ஷ்வாலை கேட்ச்சை விட்டது, பெரிய பின்னடைவாக அமைந்தது.
2.டாப் ஆர்டர் சொதப்பல்: 211 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில், ஓபனர் குமார் குஷக்ரா 14 பந்தில் 18 ரன்களைதான் அடித்தார். மேலும், கிளென் பிலிப்ஸ் 4 பந்தில் 3 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 2 பந்தில் 4 ரன்களையும் எடுத்து அவுட் ஆனார்கள். இந்த மூன்று பேரும் சொதப்பியது, அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
3.கடைசி நேரத்தில் சொதப்பல்: 18 ஓவர்கள் முடிவில் குஜரா் அணி 196/7 என்ற நல்ல நிலைமையில்தான் இருந்தது. கடைசி 12 பந்துகளில் 15 ரன்கள்தான் தேவைப்பட்டது. காகிசோ ரபாடா, ரஷித் கான் ஆகியோர் களத்தில் இருந்தார்கள். இந்நிலையில், 19ஆவது ஓவரை வீசிய ஜோப்ரா ஆர்ச்சர், 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து அசத்தினார். பிறகு, கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது துஷர் தேஷ்பண்டே பந்துவீசினார். அவரும் 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்ததால், குஜராத் அணி, 20 ஓவர்களில் 204/8 ரன்களை மட்டும் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாணத்தில் தோற்றது.
ஸ்கோர் விபரம்: முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 55 (36), துரூவ் ஜோரல் 75 (42), வைபவ் சூர்யவன்ஷி 31 (18), ஹெட்மையர் 18 (8) ஆகியோர் அபாரமாக செயல்பட்டு அசத்தினார்கள். இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 210/6 ரன்களை குவித்தது.
காகிசோ ரபாடா 4 ஓவர்களில் 42 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். முகமது சிராஜ், 4 ஓவர்களில் 48 ரன்களை கசியவிட்டு ஒரு விக்கெட்டை எடுத்தார். ரஷித் கான் 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். அசோக் குமார் 4 ஓவர்களில் 37 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்த நிலையில், பிரசித் கிருஷ்ண்டா 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
குஜராத் டைடன்ஸ் இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில், ஓபனர் சாய் சுதர்ஷன் சிறப்பாக செயல்பட்டு 44 பந்துகளில் 9 பவுண்டர் 3 சிக்ஸர்கள் உட்பட 73 ரன்களை குவித்து அசத்தினார். மற்ற பேட்டர்கள் யாரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஜாஸ் பட்லர் 26 (14), கேப்டன் ரஷித் கான் 24 (16), காகிசோ ரபாடா 23 (16) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை அடித்தனர். இறுதியில், குஜராத் டைடன்ஸ் அணி, 20 ஓவர்களில் 204/8 ரன்களை மட்டும் எடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ராஜஸ்தான் அணியில், இம்பாக்ட் வீரராக களம் கண்ட ரவி பிஷ்னோய், 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக்கொடுத்தாலும், 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

