Dailyhunt
Happy Easter 2026 Wishes: குடும்பம், நண்பர்களுடன் வாட்ஸ்அப்பில் பகிர சிறந்த ஈஸ்டர் வாழ்த்துகள்

Happy Easter 2026 Wishes: குடும்பம், நண்பர்களுடன் வாட்ஸ்அப்பில் பகிர சிறந்த ஈஸ்டர் வாழ்த்துகள்

Samayam Tamil 1 week ago

ஸ்டர் திருநாள் கிறிஸ்துவர்களின் முக்கியமான பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில் ஈஸ்டர் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நாளில் அதிகாலையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். மேலும், குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றுகூடி கேக் பகிர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

அதே நேரம், தூரத்தில் இருக்கும் அன்புக்குரியவர்களுக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வாழ்த்துகளை பகிர்வதும் இந்த நாளின் முக்கிய அங்கமாகும்.

ஈஸ்டர் ஒரே தேதியில் வராத காரணம்

கிறிஸ்துமஸ் போல அல்லாமல், ஈஸ்டர் ஒவ்வொரு ஆண்டும் ஒரே தேதியில் வராது. மார்ச் 21க்கு பிறகு வரும் முதல் முழுநிலவுக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை தான் ஈஸ்டர் தினமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு பகிரக்கூடிய அழகான மற்றும் அர்த்தமுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்திகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: கீழே உள்ள வாழ்த்துகள் வாட்ஸ்அப், ஸ்டேட்டஸ் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடியாக பகிரக்கூடிய வகையில் எழுதப்பட்டவை.

குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களுக்கான வாழ்த்து செய்தி

  • என் அன்பு அப்பா, அம்மாவிற்கு இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள்! உயிர்த்தெழுந்த ஆண்டவர் உங்களுக்கு நல் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.
  • என் அன்பு தம்பி/அண்ணனுக்கு இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள்! இந்த நாள் உனக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.
  • இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள் சகோதரி! இயேசுவின் ஆசீர்வாதம் உனக்கு என்றும் துணையாக இருக்கட்டும்.
  • அன்பு உறவுகளுக்கு, உங்கள் இல்லத்தில் இயேசு கிறிஸ்துவின் அருளும் மகிழ்ச்சியும் என்றும் நிறைந்திருக்கட்டும். இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்!
  • நம் குடும்பத்தில் அன்பும் சமாதானமும் பெருகட்டும். அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்.



நண்பர்களுக்கான ஈஸ்டர் வாழ்த்து செய்தி

  • உயிர்த்தெழுந்த இயேசுவின் பேரன்பு உன் வாழ்வை அழகாக்கட்டும். உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள் நண்பா
  • இந்த ஈஸ்டர் திருநாள் உன் வாழ்வில் புதிய தொடக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். இனிய ஈஸ்டர் வாழ்த்துகள்
  • இருள் மறைந்து உன் வாழ்வில் ஒளி பிறக்கட்டும். உயிர்த்தெழுந்த ஆண்டவர் உனக்கு சகல நன்மைகளையும் வழங்க வேண்டுகிறேன். இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள்
  • மகிழ்ச்சியான இந்த ஈஸ்டர் நாளில், உன் கனவுகள் அனைத்தும் நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துகள். Happy Easter
  • நம் நட்பு இதே உற்சாகத்துடன் என்றும் நீடிக்கட்டும். இந்தப் திருநாள் உனக்கு ஒரு புதிய ஆரம்பமாக அமையட்டும். - ஈஸ்டர் நல்வாழ்த்துகள் நண்பா!

வாழ்க்கை துணைக்கான ஈஸ்டர் வாழ்த்து

  • இயேசுவின் பேரன்பு உன்னை எப்போதும் வழிநடத்தட்டும். என் அழகான தேவதைக்கு இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்
  • இந்த புனித நாளில், நீ விரும்பும் அனைத்தும் உனக்கு கிடைக்க வேண்டுகிறேன். இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள் செல்லமே!
  • என் வாழ்வை அழகாக்கும் உனக்கு, இந்த புனிதமான ஈஸ்டர் திருநாள் இன்னும் பல மகிழ்ச்சியான தருணங்களை கொண்டு வரட்டும். Happy Easter
  • நம்ம வாழ்க்கை இந்த ஈஸ்டர் இனிப்புகளை விட இன்னும் இனிமையாக இருக்கட்டும். Happy Easter என் அன்பே!



நல் உறவுகளுக்கான ஈஸ்டர் வாழ்த்து

  • மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, எங்களுக்கு அறிவும் வழிகாட்டுதலும் அளித்ததற்கு நன்றி. இந்த ஈஸ்டர் திருநாள் உங்களுக்கு அமைதியையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்.
  • பக்கத்து வீட்டாருக்கு, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள்! இந்த உயிர்ப்புத் திருநாள் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும் சமாதானத்தை கொண்டு வரட்டும்.
  • அலுவலக நண்பருக்கு, இனிய ஈஸ்டர் வாழ்த்துகள் நண்பா! உன் பணியிலும் வாழ்விலும் எல்லா வெற்றிகளும் கிடைக்கட்டும்.
  • நலம் விரும்பிகளுக்கு, இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள்! இயேசுவின் ஆசீர்வாதம் உங்களுக்கு என்றும் துணையாக இருக்கட்டும்

புது வாழ்வின் ஆரம்பம்

இந்த ஈஸ்டர் திருநாள் வெறும் வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல, நம் வாழ்க்கையில் நம்பிக்கையும் புதிய தொடக்கத்தையும் அளிக்கும் ஒரு முக்கிய நாளாகும். இந்த நாள் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் புதிய உத்வேகத்தை கொண்டு வரட்டும்.

மேலே உள்ள வாழ்த்துகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களுடனும் பகிர்ந்து இந்த ஈஸ்டர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் - Happy Easter 2026!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil