Dailyhunt
Happy Mothers day 2026 Wishes: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவுக்கு வாஸ்ட்அப்பில் பகிர அழகான வாழ்த்துகள்

Happy Mothers day 2026 Wishes: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவுக்கு வாஸ்ட்அப்பில் பகிர அழகான வாழ்த்துகள்

Samayam Tamil 4 days ago

2026 இன்று (மே 10) கொண்டாடப்படும் அன்னையர் தினம், தாய்மார்களின் அன்பு மற்றும் தியாகத்தை கெளரவிக்க அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு நாளாகும்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

வெறும் வார்த்தைகளால் அம்மாவின் அன்பை வெளிப்படுத்த முடியாது என்றாலும், இந்த அன்னையர் தினத்தில் உங்கள் அன்பு தாய்க்கு சொல்ல வேண்டிய மனதிற்கு நெருக்கமான வாழ்த்து செய்திகளை இங்கு தொகுத்துள்ளோம்

அன்னையர் தின அழகான வாழ்த்து செய்திகள்

  • அன்பு, தியாகம் மற்றும் பொறுமையின் சிகரமாக விளங்கும் அனைத்து தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
  • கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் வானத்தில் இருக்கலாம், ஆனால் என் வீட்டு நிலவு நீ மட்டும்தான் அம்மா..Happy Mothers Day!
  • என் முதல் ஆசிரியர், என் சிறந்த நண்பன், என் நிரந்தர வழிகாட்டி என எல்லாமே நீதான் அம்மா. உனக்கு என் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்
  • நான் பார்த்த முதல் முகம், நான் கேட்ட முதல் குரல், நான் உணர்ந்த முதல் அன்பு... எல்லாமே நீதான் அம்மா
  • வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு உன் மேல் அன்பு வைத்திருக்கிறேன். எனக்கு அம்மாவாக கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். Happy Mothers day!
  • வீடு என்பது வெறும் சுவர்கள் அல்ல, உன்னுடைய அரவணைப்புதான் என் உண்மையான சொர்க்கம்! இனிய அன்னையர் தின வாழ்த்துகள்


  • உலகிலேயே எனக்கு அதிகம் பிடித்த நபருக்கு, இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!
  • நிபந்தனையே இல்லாத ஒரே அன்பு 'அம்மாவின் அன்பு' மட்டுமே. அந்த அன்பை எனக்கு அள்ளி கொடுக்கும் உனக்கு இந்த நாள் இனிமையாக அமையட்டும்!" Happy mothers day
  • வாழ்க்கை போராட்டத்தில் எப்படி உறுதியாக நிற்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக்கொடுத்த முதல் ஆசான் நீ. என் தன்னம்பிக்கையின் ஆணிவேர் நீதான் அம்மா. இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
  • நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் உன் ஆசீர்வாதம் ஒரு நிழலைப் போல என்னைப் பாதுகாக்கிறது.. Happy Mothers day!
  • வெயிலில் வாடும்போது நிழலாகவும், மழையில் நனையும்போது குடையாகவும் இருந்து என்னைக் காக்கும் என் அன்பு அம்மாவுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
  • காலங்கள் மாறலாம், உறவுகள் மாறலாம், ஆனால் மாறாத ஒரு அதிசயம் 'அம்மாவின் அன்பு' மட்டுமே. Happy mothers day!

இந்த அன்னையர் தினத்தில், மேலே பகிர்ந்துள்ள வாழ்த்து செய்திகள் அனுப்புவதை தாண்டி அம்மாவுடன் நேரத்தை செலவிடுங்கள். பழைய நினைவுகளை மனம்விட்டு பேசுங்கள். ஏனெனில், அம்மா என்ற உறவு ஒரு நாள் கொண்டாட்டமல்ல, வாழ்நாள் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய உன்னத உணர்வு.

சமயம் தமிழ் சார்பாக அனைத்து தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் - Happy Mothers day 2026!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil