Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இபிஎஸ் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம்: புறக்கணித்த அதிமுக எம்எல்ஏ - என்ன காரணம்?

இபிஎஸ் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம்: புறக்கணித்த அதிமுக எம்எல்ஏ - என்ன காரணம்?

Samayam Tamil 2 weeks ago

ட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தீவிரமான ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மாவட்ட ரீதியாக நிர்வாகிகளை அழைத்து தேர்தல் தோல்வி, முடிவுகள் பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறார்.

இதனிடையில் இன்றைய தினம் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில் எம்எல்ஏ ஒருவர் பங்கேற்காதது பரபரப்பினை கிளப்பியுள்ளது.

அதிமுக தொடர்ந்து பல விதமான சவால்களை எதிர்க்கொண்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் ராஜினாமா, முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து தவெகவில் இணைவது என போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி கொண்டிருக்கிறது. இது அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள நிலையில், இபிஎஸ் இதுக்குறித்து வெளிப்படையாக கருத்து சொல்லாமல் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் மாவட்ட ரீதியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் இன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் அந்த மாவட்டத்தை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனையில் ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ணன் ரெட்டி பங்கேற்றவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் அரசுக்கு இவர் ஆதரவு அளித்த நிலையில், பாலகிருஷ்ணனின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அவர் மன்னிப்பு கடிதம் வழங்கி இபிஎஸ் அணியில் இணைந்ததை தொடர்ந்து அமைப்பு செயலர் பதவி வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த பாலகிருஷ்ணன் ரெட்டி, தற்போது இபிஎஸ் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆற்காடு எம்எல்ஏ எஸ்.எம். சுகுமார் மற்றும் கே.சி. வீரமணி இருவரும் பங்கேற்கவில்லை.

இது பல விதமான விவாதங்களை கிளப்பிய நிலையில், இவர்கள் இருவரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கு வாய்ப்புள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம். சுகுமார், தொகுதி பணி காரணமாகவே இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த தகவலை அதிமுக துணை பொதுச்செயலாளரிடம் ஏற்கனவே சொல்லி விட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

அதோடு மாற்றுக்கட்சிக்கு செல்வதாக வெளியான தகவல்களுக்கு சூடுகாட்டுக்கு போவேனே தவிர வேறு கட்சிக்கு செல்ல மாட்டேன். தனக்கு போட்டியிட வாய்ப்பளித்து எடப்பாடி பழனிசாமியால் தான் வெற்றி பெற்றேன். இந்த தொகுதி நிர்வாகிகள் எனக்காக பணியாற்றினார்கள். பிறகு எப்படி வேறு கட்சிக்கு போவேன் எனவும் தெரிவித்தார். இதனால் வேறு கட்சிக்கு போவதாக வெளியான வதந்திகளுக்கு எஸ்.எம். சுகுமார் முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil