Dailyhunt
இபிஎஸ்ஸை ஆளுநர் ஆக்கிடுவாங்க.. சூதானமா இருந்துகோங்க.. பரப்புரையில் அதிரடி காட்டிய கனிமொழி

இபிஎஸ்ஸை ஆளுநர் ஆக்கிடுவாங்க.. சூதானமா இருந்துகோங்க.. பரப்புரையில் அதிரடி காட்டிய கனிமொழி

Samayam Tamil 1 week ago

ட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. குறிப்பாக முதலமைச்சர் மு.க.

ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையில் ஒவ்வொரு கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது, அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கி உள்ளது. இதனியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியும் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளார்.

இபிஎஸ் தீவிர பரப்புரை

சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரை அரசியல் களம் திமுக, அதிமுக என்றே உள்ளது. இதனிடையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை இந்த தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திமுக தேர்தல் அறிக்கை

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருகிறது. மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டார்கள் என பல விமர்சனங்களை முன்வைத்து பரபரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதோடு திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி என்றும் விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ள கனிமொழி, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கனிமொழி பிரச்சாரம்

அதாவது சிவகங்கையில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பரப்புரை மேற்கொண்ட நிலையில், பிஜேபியுடன் இன்னைக்கு யார் கோர்த்து நிற்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். உடனே அங்கு குழுமியிருந்தத தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி என கத்தினார்கள். இதனையடுத்து பாஜகவுடன் கைகோர்த்த எத்தனையோ கட்சிகளின் நிலை இன்னைக்கு என்னன்னு நமக்கு தெரியும். பலதடவை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ் எதிர்காலம் நினைத்து கவலை

அவர் இன்னைக்கு ராஜ்ய சபா எம்பியாக கொண்டு வரக்கூடிய நிலை உருவாகியுள்ளது. எடப்பாடிக்கு அடுத்து ஆளுநர் வேலை தான். அவரை எந்த மாநிலத்துக்கு அனுப்புவாங்கன்னு தெரியலை. அவருடைய எதிர்காலம் அதுதான். நாம் ரொம்ப கவலையுடன் சொல்கிறேன். நமக்கு இருக்கக்கூடிய ஒரே எதிர்கட்சி. பிஜேபியை போன்று எதிர்கட்சியே இருக்கக்கூடாதுன்னு நினைக்கிற ஆள் நம்ம கிடையாது. எதிர்கட்சி இருக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். பார்த்து சூதனமாக இருந்து கொள்ளுங்கள்.

கலைஞரின் வாசகம் காப்பி

இல்லைன்னா எங்காவது ஆளுநராக தான் அனுப்புவாங்க. இவ்வாறு கனிமொழி சிவகங்கை பரப்புரையில் பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதே போல் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்து விட்டதாகவும் இபிஎஸ் பேசியிருந்த நிலையில், அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார் கனிமொழி. அதாவது, கலைஞரின் 'உறவுக்கு கை கொடுப்போம். உரிமை குரல் கொடுப்போம்' என்ற வாசகத்தை கூட விடாமல் காப்பி அடித்து எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் அறிக்கையில் வைத்துள்ளார்.

திமுக வேட்பாளர்கள் பட்டியல்

நன்றாக படிக்கும் மாணவர்களை பார்த்து தான் காப்பி அடிப்பார்கள். பெயில் ஆகக்கூடிய மாணவர்களை பார்த்து யாராவது காப்பி அடிப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் கனிமொழி. இதனிடையில் தூத்துக்குடி அவர் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இதற்காக அவரது பெயரில் விருப்பமனுவும் அளித்தனர். ஆனால் திமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் கனிமொழி இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil