Aloe vera gel for anti aging: கற்றாழை ஜெல், சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை தூண்டி சுருக்கங்களை குறைக்க உதவும் இயற்கை தீர்வாகும்.
அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்
கற்றாழை ஜெல், சரும பராமரிப்பில் பல தலைமுறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் உள்ள மருத்துவ குணங்கள் சருமத்தைப் பாதுகாப்பதோடு, பலவிதமான தோல் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வாக அமைகிறது. குறிப்பாக, ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் வைட்டமின்கள், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, வயதான தோற்றத்தை தடுக்க செய்கிறது.
Indian Journal of Dermatology இதழில் வெளியான Aloe vera குறித்து செய்யப்பட்ட review ஆய்வின்படி, கற்றாழை ஜெல் சருமத்தில் 'Fibroblast' செல்களை தூண்டுகிறது. இந்த செல்கள் தான் சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு தேவையான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இழைகளை உருவாக்கின்றன. இதனால் சருமம் சுருக்கங்கள் இன்றி இளமையாக மாறுகிறது என குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த ஆய்வறிக்கையில், கற்றாழை ஜெல்லில் உள்ள ஜிங்க் உள்ளடக்கம், சிறந்த 'அஸ்ட்ரிஜென்ட் ஆக செயல்பட்டு சருமத் துளைகளைச் சுருக்கி இறுக்கமடையச் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
முகத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை தடுக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தும் வழிகளை பார்க்கலாம்கற்றாழை ஜெல் நேரடி மசாஜ்

கற்றாழை ஜெல்லில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவும்
- முதலில் முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்
- பிறகு பிரஷ் கற்றாழை ஜெல்லை முகம் மற்றும் கழுத்தில் வட்ட வடிவில் தடவி மசாஜ் செய்யவும்
- சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் வாஷ் செய்ய வேண்டும்
கற்றாழை - தேன் மாஸ்க்

தேன் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, சுருக்கங்களை நீக்க உதவுகிறது. MDPI தளத்தில் Pharmaceuticals பிரிவில் வெளியான ஆய்வறிக்கையில், தேன் சார்ந்த தயாரிப்புகள் சுருக்கங்களை குறைத்ததாக குறிப்பிட்டுள்ளது
- 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் தேன் எடுத்துகொள்ளவும்
- இரண்டையும் கலந்து முகம் முழுவதும் பயன்படுத்த வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்ய வேண்டும்
கற்றாழை - வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ, செல்களை புதுப்பித்து சுருக்கங்கள் இல்லாத இளமை தோற்றத்தை அளிக்கிறது
- ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு வைட்டமின் ஈ கேப்சியூல் சேர்த்து கலக்கவும்
- தூங்குவதற்கு முன் இதை முகத்தில் தடவி 2 முதல் 3 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
- இரவு முழுவதும் அப்படியே விட்டு, காலையில் ஐஸ் வாட்டரில் கழுவவும்
கற்றாழை ஜெல் பயன்பாட்டில் முக்கிய குறிப்புகள்

- கடையில் வாங்கும் ஜெல்லை விட, கற்றாழை செடியில் இருந்து எடுக்கப்படும் ஜெல் அதிக பலனை அளிக்கும்
- பயன்படுத்துவதற்கு முன்பு, காதின் பின்புறம் அல்லது கையில் தடவி பார்த்து அலர்ஜி இல்லை என்பதை உறுதிபடுத்திகொள்ளவும்.
- அரிப்பு ஏற்பட்டால் கற்றாழை ஜெல்லை உடனே நிறுத்த வேண்டும்
வாரத்திற்கு 3 முதல் 4 முறை கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால், சில வாரங்களிலேயே சருமத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்

