Dailyhunt
இல்லத்தரசிகளே! சம்மரில் கிச்சனை குளிர்ச்சியாக வைத்திருக்க எளிய வழிகள்

இல்லத்தரசிகளே! சம்மரில் கிச்சனை குளிர்ச்சியாக வைத்திருக்க எளிய வழிகள்

Samayam Tamil 0 months ago

கோடை காலத்தில் கிச்சன் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதற்கு காற்றோட்டம் இல்லாதது, தேவையற்ற சாதனங்கள் பயன்பாடு, பல்ப் பயன்பாடு போன்றவை காரணமாக இருக்கலாம்.

கிச்சன் வெப்பத்தை இயற்கையாக கட்டுப்படுத்தும் வழிகளை இங்கே பார்க்கலாம்


கோடை காலத்தில் கிச்சனில் சமையல் செய்வது பெரிய சவாலாக இருக்கும். கேஸ் அடுப்பு, ஓவன் போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால், உட்புற வெப்பம் அதிகரித்து சில நிமிடங்கள் கூட சமையலறையில் நிற்க முடியாத சூழல் உருவாகிறது. இதற்கு போதிய காற்றோட்டம் இல்லாதது முக்கிய காரணமாகும்.

இல்லத்தரசிகளே நீங்கள் கவலைப்பட வேண்டாம். சில எளிய மாற்றங்கள் மூலம் உங்கள் சமையலறையை குளிர்ச்சியாகவும், சமையலை எளிதாகவும் மாற்றலாம்காற்றோட்டம் அதிகப்படுத்தவும்

கிச்சனை குளிர்ச்சியாக வைத்திருக்க நல்ல காற்றோட்டம் முக்கியம். சமைக்கும்போது ஜன்னல் மற்றும் கதவை திறந்து வையுங்கள். சிம்னி அல்லது எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்துவது சூடான காற்றை வெளியேற்ற பயனுள்ளதாக இருக்கும்


சமைக்கும் நேரம் மற்றும் முறையை மாற்றுங்கள்

இது கிச்சன் வெப்பத்தை குறைக்க மிகச்சிறந்த வழியாகும். வெப்பம் குறைவாக இருக்கும் அதிகாலை அல்லது மாலை நேரத்தில் சமைக்க முயற்சியுங்கள். மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் அதிகமாக இருக்கும். அச்சமயத்தில் சமைப்பதை தவிர்ப்பது நல்லது.
மேலும், வறுப்பது - பேக்கிங் செய்வதற்கு பதிலாக வேகவைத்தல், கொதிக்க வைத்தல், பிரஷர் குக்கரில் சமைத்தல் போன்றவற்றை முயற்சிக்க செய்யாலம். இவை குறைந்த வெப்பத்திலேயே உணவைச் சமைக்க உதவும்.


தேவையற்ற சாதனங்கள் அணைக்கவும்

சமையலறையில் உள்ள ஒவ்வொரு மின்சாதனமும் குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வெளியிடும். எனவே, ஓவன், மிக்ஸி, எலக்ட்ரிக் கெட்டில் போன்றவற்றை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள். பிறகு சுவிட்சை அணைத்துவிட வேண்டும்.
அதேபோல், கிச்சன் LED பல்ப் பயன்படுத்த வேண்டும். us department of energy வெளியிட்ட தகவலின்படி, இன்கேண்டசென்ட் மற்றும் CFL -வுடன் ஒப்பிடுகையில் LED பல்ப் மிகக் குறைந்த வெப்பத்தையே வெளியிடுகின்றன. மின்சார செலவும் மிச்சமாகும்.


ஃபேன் பயன்படுத்தலாம்

சிலர் வெப்பத்தை குறைக்க ஃபேன் பயன்படுத்துகின்றனர். உண்மையில், ஃபேன் அறையில் வெப்பநிலையை குறைக்காது. ஆனால், தோலில் உள்ள வியர்வை ஆவியாகும் வேகத்தை அதிகரிக்கும். வியர்வை ஆவியாகும்போது வெப்பத்தை எடுத்துகொள்வது, உடல் குளிர்ச்சியடைகிறது.
மின்விசிறியை ஜன்னல் அல்லது கதவு அருகே வைப்பது சிறந்த முடிவாகும். வெளியிலிருந்து புதிய காற்றை உள்ளே இழுக்க உதவும்.
குறிப்பு: ஃபேன் காற்று அடுப்பின் நெருப்பை அணைக்காதவாறு பார்த்துகொள்ளவும்


கிச்சன் கர்ட்டன் பயன்பாடு

கிச்சன் ஜன்னலில் லைட் நிற கர்ட்டன் பயன்படுத்த செய்யலாம். ஏனெனில், கருப்பு போன்ற அடர் நிறங்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சக்ககூடும். கிச்சனில் சூரிய ஒளி நேரடியாக வரும் பட்சத்தில், கர்ட்டன் சிறந்த பாதுகாப்பு அரணாக இருக்கும்.
மேலும், கிச்சனின் பொருட்களை அடுக்கி வைத்திருப்பது, ஜன்னல் அருகே செடி வளர்ப்பது போன்றவையும் குளிர்ச்சி விளைவை பெற உதவியாக இருக்கும்


போதிய நீரேற்றம் மற்றும் இடைவெளி முக்கியம்

சமைக்கும் போது தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வையுங்கள். சூடாக அல்லது சோர்வாக இருந்தால் பிரேக் எடுத்துகொள்ளுங்கள். லைட் நிறம் மற்றும் சுவாசிக்கக்கூடிய ஆடைகளை மட்டுமே சமைக்கும் போது அணியுங்கள்.

உணவுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே தயார் செய்வது அடுப்பு அருகே நிற்கும் நேரத்தை குறைக்கும்.

சமையலறை வெப்பத்தை முழுமையாக நீக்கிட முடியாது. ஆனால், காற்றோட்டம் மேம்படுத்துதல், சூரிய ஒளி தடுத்தல், தேவையற்ற சாதனங்கள் அணைத்தல் போன்றவை வெப்பத்தை கணிசமாக குறைக்க உதவும். சம்மரிலும் சமையலை சோர்வு இன்றி மகிழ்ச்சியாக செய்ய முடியும்


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil