Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IND vs SL - உங்க 2 பேராலதான் ஜெயிக்க முடியல: அணி மீட்டிங்கில் கொந்தளித்த கௌதம் கம்பீர்

IND vs SL - உங்க 2 பேராலதான் ஜெயிக்க முடியல: அணி மீட்டிங்கில் கொந்தளித்த கௌதம் கம்பீர்

Samayam Tamil 1 week ago

லங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, இறுதியில் 165 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதனைத் தொடர்ந்து, 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி, அபாரமான முறையில் ஆதிக்கம் செலுத்தியது.

முதல் இன்னிங்ஸில் 503/9 ரன்களை எடுத்து டிக்ளேர் அறிவித்த நிலையில், இலங்கை அணி, 290/10 ரன்களை சேர்த்து, முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் பின்தங்கியது. பிறகு, கடைசி இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கருதி, இலங்கைக்கு பாலோ ஆன் கொடுத்தனர்.

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில், இலங்கை அணி ஒரு கட்டத்தில் 218/6 என தடுமாறியது. அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், சோனல் தினுஷா மற்றும் கெஷரா நுவந்தா ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்து அசத்தினார்கள். இருவரும் இணைந்து, 242 பந்துகளில் 112 ரன்களை சேர்த்தனர்.

அப்போது, இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க இந்திய பௌலர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. குறிப்பாக, 80ஆவது ஓவர் முடிந்தப் பிறகு புது பந்தை எடுத்த இந்திய அணியில், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ச்சியாக, ஸ்டெம்ப் லைனுக்கு வெளியே பந்துவீசி சொதப்பினார்கள். அதாவது, புது பந்தில் 7 சதவீத பந்துகளை மட்டுமே ஸ்டெம்ப் லைனில் வீசினார்கள். மீதம், 93 சதவீத பந்துகளை அவுட் சைட் ஆப் ஸ்டெம்பில்தான் வீசினார்கள்.

இதனால், புது பந்தில் ஸ்விங் இருந்தும், அது சோனல் தினுஷா மற்றும் கெஷரா நுவந்தாவை எந்த விதத்திலும் அச்சுறுத்தவில்லை.

இதனால்தான், தற்போது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடும் அதிருப்தியில் இருக்கிறார். இதுகுறித்து, அணி மீட்டிங்கில் பேசிய கம்பீர், ''இப்படியா சொதப்புறது? புது பந்தில் 93 சதவீத பந்துகளை அவுட் சைட் ஆப் ஸ்டெம்பில் வீசியது ஏன்? சிராஜ், பிரசித் இருவரும் பேசி வைத்து, இப்படி பந்துவீசியதுபோல் தெரிந்தது. அந்த சமயத்தில் ரன்களை கட்டுப்படுத்துவது முக்கியமா, விக்கெட்டை எடுப்பது முக்கியமா?''

''நீங்கள் 2 பேரும் செய்த தவறால்தான் வெல்ல முடியவில்லை. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பும், பிரச்சனையாக மாறியுள்ளது'' என கம்பீர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்திய அணிக்கு, இன்னமும் 7 டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது. நியூசிலாந்து மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளும், அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது. இப்படி, 7 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி 6 வெற்றிகளை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. குறைந்தபட்சம், இந்த 7 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு டிராவை செய்தாக வேண்டும்.

WTC புள்ளிப் பட்டியல் இந்திய அணி இடம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில், இந்திய அணி 51.120 சதவீத புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் இருக்கிறது. இலங்கை அணி, 33.330 சதவீத புள்ளிகளுடன், அடுத்த இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil