Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
India Team - அணி மீட்டிங்கில், கம்பீரை எதிர்த்து பேசிய ஷுப்மன் கில்: காரணம், இந்த சம்பவம் தான்

India Team - அணி மீட்டிங்கில், கம்பீரை எதிர்த்து பேசிய ஷுப்மன் கில்: காரணம், இந்த சம்பவம் தான்

Samayam Tamil 5 days ago

லங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வெல்ல முடியாததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பில், இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்ததால், இந்திய அணி, அடுத்து நியூசிலாந்து மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள், சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட்கள் என மொத்தம் 7 டெஸ்ட் போட்டிகளில், 6 வெற்றிகளை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. குறைந்தது, 7 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு டிராவை பெற்றாக வேண்டும்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் முன்னிலை பெற்றும், வெற்றியைப் பெற முடியாதது ஏன் என்பது குறித்து, பிசிசிஐ மீட்டிங்கில், நிர்வாகிகள் கேள்வி எழுப்பினார்கள். இந்த மீட்டிங்கில் கேப்டன் ஷுப்மன் கில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் பதில் அளித்தனர்.

அப்போது, முதலில் பேசிய கம்பீர், ''இரண்டாவது இன்னிங்ஸில், புது பந்தில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் ஸ்டெம்ப் பைலனை டார்கெட் செய்யவில்லை. 7 சதவீத பந்துகளை ஸ்டெம்ப் லைனிலும், 93 சதவீத பந்துகளை அவுட் சைட் ஆப் ஸ்டெம்பிலும் வீசினார்கள். இதுதான், தோல்விக்கு முதல் காரணம். மேலும், துரூவ் ஜோரல் சதம் அடிக்கும் வரை காத்திருந்தது தவறு. அவர், 99 ரன்களுக்கு பிறகு, 4 ஓவர்களை எடுத்துக் கொண்டார். முன்கூட்டியே டிக்ளேர் செய்திருக்க வேண்டும்'' என கில் மீது பழிபோடும் வகையில் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, கில்லிடம் பிசிசிஐ நிர்வாகிகள் கேள்வி எழுப்பினார்கள். புது பந்தில், வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகபடியான பந்துகளை அவுட் சைட் ஆப் ஸ்டெம்பில் வீசக் காரணம் என்ன என கில்லிடம் கேட்ட நிலையில், அதற்கு கில், ''பேட்டர்கள் செட்டில் ஆகிவிட்டனர். மேலும், ரன்களை அடிக்க பார்ப்பார்கள் என்பதால்தான், அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப்பில் பந்துவீச வைத்து, கேட்ச் எடுக்க பார்த்தோம்'' எனக் கூறினார்.

அடுத்து, துரூவ் ஜோரல் சதம் அடிக்கும் வரை தாமதம் செய்தது ஏன் ஏன்ற கேள்விக்கு பதில் அளித்த கில், ''தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான், ஜோரல் சதம் அடிக்கும் வரை காத்திருப்போம் எனக் கூறினார். விரைவாக சதம் அடியுங்கள் என ஜோரலுக்கு செய்தி அனுப்ப முயன்றேன். ஆனால், அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என கம்பீர்தான் தெரிவித்தார்'' என கில் பேசியிருக்கிறார்.

திடீரென்று, கம்பீருக்கு எதிராக கில் பேசியது, கம்பீர் மீது கில் அதிருப்தியில் இருப்பது தெரிய வருகிறது.

சமீப காலமாகவே, இந்திய டெஸ்ட் அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இலங்கை டெஸ்ட் தொடரில் கூட, இலங்கை அணி டாப் ஆர்டர் பேட்டர்களில் இருவரும் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், இந்திய அணியால் ஒரு வெற்றியைக் கூட பெற்றிருக்க முடியாது என்ற நிலைமைதான் இருந்தது.

சீனியர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி, புஜாரா, முகமது ஷமி போன்றவர்களை, திடீரென்று மொத்தமாக ஓரங்கட்டியதுதான், இந்திய அணியின் இந்த நிலைமைக்கு காரணம் என்ற கருத்தும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil