Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இன்றைய ராசி பலன் 28 ஆகஸ்ட் 2026 : காயத்ரி ஜபம் நாளில் 12 ராசிகள் பெறும் பலன்கள்

இன்றைய ராசி பலன் 28 ஆகஸ்ட் 2026 : காயத்ரி ஜபம் நாளில் 12 ராசிகள் பெறும் பலன்கள்

Samayam Tamil 2 weeks ago

ன்று ஆகஸ்ட் 28, 2026 வெள்ளிகிழமை, பராபவ ஆண்டு ஆவணி மாதம் 11ம் தேதி. பிரதமை திதி உள்ள இன்று கும்ப ராசியில் உள்ள சதயம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கிறார்.

மேலும் சித்த யோகம் கூடிய தினத்தில், சிம்ம ராசியில் கேது, புதன், சூரியன் மூன்று கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. இன்று கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள்.


இன்றைய தின பலன் ஆகஸ்ட் 28ம் தேதி வெள்ளி கிழமை, ஆவணி 11ம் தேதியில், கும்ப ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேலும் சித்த யோகம் உள்ளது. கடகத்தில் குரு, மகரத்தில் சந்திரன் சஞ்சாரத்தால் பரிவர்த்தனை யோகம் உருவாகிறது. சிம்ம ராசியில் புதன் மற்றும் சூரியன் இணைவதால் 'புதாதித்ய யோகம்' உருவாகிறது. இன்று சிம்மத்தில் கேதுவுடன் சூரியனும், கும்பத்தில் ராகுவுடன் சந்திரன் இருப்பதால் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இன்று கடக ராசியை சேர்ந்த பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நாள். இன்று காயத்ரி ஜபம்.மேஷம் ராசி பலன்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். இன்று உங்களுடைய நிதி நிலையை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். துணையுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். இன்று உங்கள் காதலுக்காக பரிசு வாங்க நினைப்பீர்கள். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்களுடைய அலுவலகப் பணிகளை தள்ளி போடாமல் சரியாக செய்து முடிக்கவும்.


ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று வணிகம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலம் நாள் தொடங்கும்.காதல் விஷயங்களில் இன்று நல்ல நாளாக அமையும். இன்று உங்களுடைய பழைய திட்டங்கள் அல்லது வாய்ப்புகள் கைகொடுக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுடைய செலவுகள் மற்றும் நிதி சார்ந்த சுமைகள் அதிகரிக்கும். இது தொடர்பாக உங்கள் உறவில் பிரச்சினைகள் தலை தூக்க வாய்ப்பு உண்டு.


மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டால், நீங்கள் மிகுந்த மனநிறைவை அடைவீர்கள். அவ்வப்போது மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்பதில் தவறில்லை. உங்களுடைய நீண்ட கால கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுடைய தவறை சுட்டிக்காட்ட வாய்ப்பு உண்டு. இருப்பினும் அவற்றை நேர்மறையாக எடுத்துக் கொண்டு உங்கள் தவறை திருத்தவும். உங்களுடைய திருமண வாழ்க்கையில் சில விஷயங்களை குறித்து அதிகமாக சிந்திக்க நேரிடும்.


கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களை நிரூபிப்பதற்கான பல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். அந்த வாய்ப்புகளை அடையாளம் கண்டு, சூழலுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய நாள். மேலும், வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் உங்கள் கதவைத் தட்டாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிதி சார்ந்த விஷயங்களில் மனதிற்கு தொந்தரவு தரக்கூடிய சில விஷயங்கள் நடக்கும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் காதல் வாழ்க்கையில் துணை குறித்து அதிகமாக சிந்திப்பீர்கள். இன்று எப்படிப்பட்ட சூழலையும் நிதானத்துடன் கையாள வேண்டிய நாள்.


சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் முதல் பாதியில் மற்றவர்களுக்கு நிதி ரீதியாக உதவும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஒரு கடினமான பிரச்சனை தீர்க்கப்படும். பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது புத்திசாலித்தனமாக இருக்கும். உங்கள் உறவில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். காதல் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.பணியிடத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், புதிய பொறுப்புகளை ஏற்கவும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் காதல் அல்லது திருமண உறவில் உங்கள் எண்ணங்களை நேரடியாக வெளிப்படுத்தவும்.


கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் பல பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய நாளாக இருக்கும். இன்று நீங்கள் சிறிய வேலை செய்தாலும் அதற்கான நிதி வாய்ப்புகள் சிறப்பானதாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் தொடங்கு சாதகமான நாள். வீட்டில் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் முடிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். வணிகத்தில் எந்தவொரு ரிஸ்க் எடுப்பதும் பலனளிக்காது. இன்று புதிய மற்றும் பெரிய வெற்றியை அடைவதற்கான முயற்சிக்கான அடியை எடுத்து வைப்பீர்கள்.


துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பழைய கடன்களை அடைக்க முடியும். இன்று எந்த ஒரு விவாதத்திலும் உடனடியாக நீங்கள் எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்கவும். சில அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டியிருக்கலாம். பணப்பையை (பர்ஸ்) கையாள்வதில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்குத் தேவைப்படாத பொருட்களை வாங்க வேண்டாம். உங்கள் தனித்துவமான யோசனைகள் பாராட்டப்படும். காதல் தொடர்பான விஷயங்களில் வாக்குவாதங்கள் வளர்ப்பதை விட, அமைதியாக பேசுவது நல்லது. உங்களுடைய மனதை தெளிவாக வைத்திருக்கவும்.


விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நாளின் முதல் பாதியில் சில முக்கியமான வேலையை முடிப்பதற்கான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். ஒரு பழைய நண்பர் திடீரென உங்கள் முன் தோன்றலாம். அவர்கள் கடன் கேட்டால், முதலில் உங்கள் சேமிப்பைச் சரிபார்ப்பது அவசியம். இன்று நிதி சார்ந்த விஷயங்களை மற்றவரையில் முழுமையாக சார்ந்திருக்க வேண்டாம். அதே சமயம் பிறருடைய கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்வதை தவிர்த்து சிந்தித்து செயல்படவும். காதல் உறவில் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஆக்கப்பூர்வமான பணிகளில் உங்கள் ஆர்வமும் அதிகரிக்கும். இன்று எப்படிப்பட்ட சூழ்நிலாக இருந்தாலும் மனதை அமைதியாக வைத்து செயல்படவும்.மாலை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் நேரத்தைச் செலவிடுவீர்கள். இன்று உங்கள் வேலை தொடர்பாக சம்பள உயர்வு, பணி சுமை தொடர்பான விஷயங்கள் நடக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்த்து, அவர்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்பது நல்லது. சரியான நேரம் வரும்போது அவை உங்களுக்குப் பயனுள்ளதாக அமையலாம்.


மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று காலை முதல், ஒரு புதிய திட்டத்திற்கான புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் உணர்வீர்கள். உங்கள் வேலை தொடர்பாக அனைத்து விவரங்கள் மற்றும் சூழலை புரிந்து செயல்படுவது, உங்கள் வேலையை வேகமாக முடிக்க உதவும் . காதல் விவகாரம் குறித்தும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இதுவே சிறந்த நேரம். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். காதல் வாழ்க்கையில் உங்களுடைய துணை என் அன்பு மகிழ்ச்சியை தரும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil