Dailyhunt
இந்த தேதியில் பிறந்தவர்களுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள்; நியூமராலஜி சொல்லும் காரணம்

இந்த தேதியில் பிறந்தவர்களுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள்; நியூமராலஜி சொல்லும் காரணம்

Samayam Tamil 1 month ago

ண்களின் அடிப்படையில் மனிதர்களின் வாழ்க்கை, குணாதிசயம் மற்றும் விதியைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு கணிப்பு முறையாக எண் கணிதம் பார்க்கப்படுகிறது.

எண் கணிதத்தில் தனி நபரின் பிறந்த தேதியின் அடிப்படையில் மனிதர்களாகிய நம் அனைவருக்கும் தனித்துவமான ரேடிக்ஸ் எண் (Radix Number) வழங்கப்படுகிறது. இந்த ரேடிக்ஸ் எண்கள், எண்ணுக்கு உரியவரின் பண்புகள், மனப்பாங்கு மற்றும் நடத்தையை பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த எண்களை பயன்படுத்தி எந்த தேதியில் பிறந்தவர்கள் வலிமையான ஒரு எதிரியாக இருப்பார்கள் என்பதையும் அறிந்துக்கொள்ள முடியும் என எண் கணிதம் விளக்குகிறது!


பிறந்த தேதியின் அடிப்படையில் 1 - 9 வரை ரேடிக்ஸ் எண்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு எண்ணும், தங்களுக்கே உரிய தனித்துவமான குணாதிசயங்களை கொண்டிருக்கும் நிலையில், எந்த தேதியில் பிறந்தவர்கள் (எந்த ரேடிக்ஸ் எண் கொண்டவர்கள்) வலிமையான ஒரு எதிரியாக இருப்பார்? தனது எதிரிக்கு சவால் விடும் விஷயங்களை தைரியமாக செய்வார்? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!ரேடிக்ஸ் எண் 1

ஆண்டின் எந்த ஒரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 1 பெறுகின்றனர். சூரியனை ஆளும் கிரகமாக கொண்ட இவர்கள், சூரியனின் ஆற்றலுடன் தொடர்புடையவர்கள். ஆற்றல் மிக்கவர்கள், ஆதிக்கம் செலுத்தும் நபர்கள். சூழ்நிலைகளை தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றும் ராஜதந்திரிகள், எதிரிகளை எப்படி கையாள்வது என்பது நன்கு அறிந்த சாமர்த்தியசாலிகள்.

சூரியனின் ஆற்றலை கொண்டிருக்கும் இவரக்ள், சுயமரியாதைக்கு முன்னுரிமை அளிப்பவர்கள். அந்த வகையில் தன் உணர்வுகளை புண்படுத்தும் நபர்களுக்கு வலிமையான ஒரு எதிரியாக மாறுகின்றனர். தங்கள் ராஜதந்திரங்கள் மூலம், எதிரிகளின் மன வலிமையை சிதைப்பார்கள்; ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்துவார்கள்.

ரேடிக்ஸ் எண் 1 கொண்டவர்களின் மனதை யாரேனும் தவறுதலாக காயப்படுத்தினால், அவர்கள் அதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதேநேரம், தெரிந்தே காயப்படுத்தினால், அதனை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தன் மனதை காயப்படுத்தும் அந்த ஒரு நபரின் முதன்மை எதிரியாக அவர்கள் மாறிவிடுவார்கள்.

தைரியத்திற்கு பெயர் பெற்ற இவர்கள், தங்கள் எதிரிகளை பழிதீர்க்க நினைக்கையில் காரியங்களை ரகசியமாக செய்வது இல்லை, வெளிப்படையாக மற்றவர் அறியும் வகையில் தைரியமாக களத்தில் இறங்கி செயல்படுவார்கள். எனவே, இவர்களிடம் சற்று எச்சரிக்கையாகவே இருங்கள்!


ரேடிக்ஸ் எண் 8

மாதத்தின் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ரேடிக்ஸ் எண் 8 வழங்கப்படுகிறது. ரேடிக்ஸ் எண் கொண்டவர்கள் சனி பகவானை ஆளும் அதிபதியாக கொண்டவர்கள். வேத ஜோதிடத்தில் சனி பகவான், தனி நபரின் வினைகளுக்கு ஏற்ப கர்ம பலனை அளிக்கும் கிரகம் ஆவார்.

சனி பகவானின் குணம், அவருடன் தொடர்பு கொண்ட 'ரேடிக்ஸ் எண் 8' கொண்டவர்களிடமும் காணப்படுகிறது. ரேடிக்ஸ் எண் 8 கொண்டவர்கள் அடிப்படையில் கடின உழைப்பாளிகள், தங்கள் லட்சியங்களை அடைய எவ்வளவு பெரிய சவாலையும் சந்திக்க தயாராக இருப்பவர்கள். தங்கள் இலக்கை அடைய நிதானமாக காத்திருப்பவர்கள்.

மறுபுறம், தங்கள் பொறுமையை பாதிக்கும் விஷயங்களை யாரும் செய்தால், அவர்களை கடுமையாக எதிர்க்கும் குணத்தையும் கொண்டுள்ளனர். தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த ஒரு நபரை மறக்க மாட்டார்கள், வாழ்நாள் எதிரிகளாக அவர்களை ஏற்பார்கள். ரேடிக்ஸ் எண் 8 கொண்டவர்களின் ஆதரவை நீங்கள் ஒரு முறை இழந்துவிட்டால், மீண்டும் அவர்களின் ஆதரவை பெறுவது இயலாத ஒரு விஷயம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.


ரேடிக்ஸ் எண் 9

ஆண்டின் எந்த ஒரு மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ரேடிக்ஸ் எண் 9 வழங்கப்படுகிறது. எண் 9 கொண்டவர்கள், செவ்வாய் கிரகத்தை ஆளும் அதிபதியாக கொண்டுள்ளனர். வேத ஜோதிடத்தில் சிவப்பு கிரகம் - ஆக்ரோஷமான ஒரு கிரகமாக எண் 9 பார்க்கப்படுகிறது. ஆற்றல் மிக்க செவ்வாய் கிரகத்தை ஆளும் அதிபதியாக கொண்ட இவர்களின் கோபத்தை கட்டுப்படுத்துவது இயலாத ஒரு விஷயம்.

அடிப்படையில் தன்மையாக நடந்துக்கொள்ளும் குணம் கொண்ட இவர்கள், தன்னை சீண்டும் நபர்களை எதிர்கொள்ள தயங்குவது இல்லை. யாருக்கும் அஞ்சுவது கிடையாது, தனது விருப்பம் போல் துணிச்சலாக செயல்படுவார்கள். முன் கோபம் கொண்டிருக்கும் இவர்கள், தங்கள் உணர்வுகளை சீண்டும் நபர்களை ஒருபோதும் விட்டு வைப்பது கிடையாது.

சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள், தன்னை சார்ந்து இருப்பவர்களின் மதிப்பு, மரியாதையையும் அவர்கள் விட்டுக்கொடுப்பது இல்லை. தன் உணர்வுகளை பாதிக்கும் நபர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க, எந்த ஒரு எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். எனவே, இவர்களிடன் ஒருபோதும் வழக்குகளை உண்டாக்க வேண்டாம், தேவையற்ற பிரச்சனைகளை செய்ய வேண்டாம்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil