Dailyhunt
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தவெக கடிதம்.. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்குமா.. கூடுகிறது அவசர செயற்குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தவெக கடிதம்.. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்குமா.. கூடுகிறது அவசர செயற்குழு

Samayam Tamil 1 week ago

ட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவினை தவெக கோரி கொண்டிருக்கிறது. இதனால் தேர்தல் முடிந்த பின்னரும், தமிழக அரசியல் பரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிபிஐ கட்சியிடம் ஆதரவு கேட்டு தவெக சார்பில் கடிதம் எழுதியுள்ளது.

தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மை பெறுவதற்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் கடிதம் எழுப்பியுள்ளது. அதோடு சிபிஐ கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியனை தொடர்பு கொண்டும் தவெக சார்பில் இருந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது சம்பந்தமாக நாளை மறுநாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கவுள்ளது.

இந்த செயற்குழு கூட்டத்தில் பேசி தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக பேசி முடிவெடுக்கப்படவுள்ளது. சிபிஐ தரப்பில் இருந்து சில கோரிக்கைகள் வைப்பது தொடர்பாகவும் இங்கு ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனிடையில் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது, தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசித்தோம்.

பாஜக போன்ற வகுப்புவாத சக்திகள் ஜனநாயகத்தின் முதல் எதிரிகள். ஒருபோதும் ஜனநாயகன் தோற்று போய்விடக்கூடாது என்பதே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு. தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கட்சியின் தலைமை நல்ல முடிவினை எடுக்கும். கட்சி எடுக்கக்கூடியே முடிவே இறுதியாகும். ஆதரவு கேட்டு தவெக தரப்பில் இருந்து தற்போது வரை எந்த விதமாக அதிகாரப்பூர்வ அழைப்பும் வரவில்லை.

கட்சி தலைமை பாஜக மற்றும் அதன் ஆதரவு சக்திகள் மீண்டும் தலை தூக்காமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுக்கும் என தெரிவித்திருந்தார். இதனிடையில் தற்போது தவெக சார்பில் இருந்து ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோரி சிபிஐ கட்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காரணத்தால், திருச்சி கிழக்கில் அவர் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. அதோடு ஒருவரை சபாநாயகர் பதவியில் அமர வைத்தால் தவெகவின் எண்ணிக்கை 106 ஆக குறையும். தமிழகத்தை பொறுத்தளவில் ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவைப்படுவதால், கூடுதலாக 12 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

இதனையடுத்து காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்டோரின் ஆதரவை தமிழக வெற்றி கழகம் கோரி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதற்கு தயாராகி வருகிறது. அதே நேரம் விசிக உள்ளிட்ட கட்சிகள் இதுக்குறித்து ஆலோசனை நடத்தி கொண்டிருக்கின்றன. இதனிடையில் ஒரேயொரு இடத்தில் வெற்றி பெற்றுள்ள பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil