இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளை பிரபல ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், எஸ் & பி குளோபல் தரமதிப்பீட்டு நிறுவனம், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முன்னர் மதிப்பிடப்பட்ட 7.1 சதவீதத்திலிருந்து குறைந்து, 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை அடைவதற்கு எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு சீர்திருத்தங்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கிரிசில் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடப்பட்ட "இந்தியா ஃபார்வர்ட்" என்ற அறிக்கை எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் தடைகள், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய், எரிவாயு விலைகள் மற்றும் நாணய மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளை இந்தியா தற்போது எதிர்கொண்டு வருவதாகக் கூறுகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா தனது மூலோபாய இருப்புகளைப் பராமரிக்க ஒரு வலுவான எரிசக்தி சேமிப்புக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
குறைந்த விலைக்கு கார் வாங்கலாம்.. மே மாத சிறப்பு தள்ளுபடி வழங்கும் மாருதி சுஸுகி!
இந்த அறிக்கையை வெளியிட்ட கிரிசில் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் தர்மகீர்த்தி ஜோஷி கூறுகையில், "மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்ந்தால் புதிய பொருளாதார அழுத்தங்கள் உருவாகக்கூடும்" என்று கூறியிருக்கிறார். ரூபாயின் மதிப்பு குறைவதும், எண்ணெய் விலை உயர்வும் பொருளாதாரத்திற்கு இரட்டை அடியாக அமைந்து, வளர்ச்சி மீதான அழுத்தத்தை அதிகரிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
ஏசி விலை உயரப் போகுது.. பொது மக்களுக்கு இனி அதிகம் செலவாகும்!
எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் உரத் துறைகளில் இந்தியா சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று ஜோஷி பரிந்துரைத்துள்ளார். நெருக்கடி தொடர்ந்தால் குளிர்காலப் பயிர்களுக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும், இருப்பினும் கோடைக்காலப் பயிர்களின் நிலைமை ஒப்பீட்டளவில் நிலையாக உள்ளது என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
வண்டியில் ஃபாஸ்டாக் இல்லாமல் சென்றால் என்ன நடக்கும்? ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு!
சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் (FTA) பலன்களைப் பெற இந்தியா தனது போட்டித்திறனை மேம்படுத்த வேண்டும் என்று ஜோஷி கூறியுள்ளார். இதற்கு விரிவான பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை. அந்த அறிக்கையின்படி, மேற்கு ஆசியாவில் மோதல் தீவிரமடைந்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 126 டாலர் என்ற நான்கு ஆண்டு கால உச்சத்தை எட்டியது. பின்னர் ஒரு பீப்பாய்க்கு சுமார் 97 டாலராகக் குறைந்தது.
பணவீக்கத்தின் மீதான தாக்கம் குறித்து ஜோஷி கூறுகையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் தாக்கம் மொத்த விலைக் குறியீட்டில் (WPI) அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் சில்லறை பணவீக்கத்தின் (CPI) மீதான தாக்கம் குறைவாகவே இருக்கும். ஏனெனில் அரசுகம் பெட்ரோல் - டீசல் மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி விலைகளை நிலையாக வைத்துள்ளத என்பது குறிப்பிடத்தக்கது.

