நீலாங்கரையில் த்ரிஷா: சவுத் குயின் த்ரிஷா கிருஷ்ணனின் 43வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.
இந்த நல்ல நாளை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துவங்கினார். அதிகாலையில் நடந்த சுப்ரபாத சேவையில் கலந்து கொண்ட த்ரிஷாவை பார்த்த பக்தர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
திருப்பதியில் இருந்து சென்னை திரும்பிவிட்டார் த்ரிஷா. தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 100க்கும் அதிகமான தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள். இதையடுத்து விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் வீட்டில் கொண்டாட்டமாக உள்ளது.
இந்நிலையில் ஊர் திரும்பிய கையோடு செய்தி அறிந்த த்ரிஷா தன் நண்பர் விஜய்யை நேரில் வாழ்த்த அவரின் வீட்டிற்கு வந்தார். அவர் காரில் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கிடையே இன்று காலை த்ரிஷா செய்த பிரார்த்தனை நிறைவேறிவிட்டது. விஜய்ணா வெற்றி பெறப் போகிறார், முதல்வராகப் போகிறார். நன்றி தலைவி என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
விஜய்யை முந்தினார் த்ரிஷா: த்ரிஷா தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக திருப்பதிக்கு செல்லவே அவர் விஜய் கட்சிக்காக பிரார்த்தனை செய்ய சென்றார் என்றே ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் தேசிய அளவில் ட்ரெண்டாகியுள்ளார் த்ரிஷா. தவெக பல்வேறு இடங்களில் முன்னிலையில் இருக்கும்போதும் கூட எக்ஸ் தள டிரெண்டில் விஜய்க்கு மூன்றாவது இடம் தான் கிடைத்திருக்கிறது. த்ரிஷா இரண்டாவது இடத்திலும், தேர்தல் முடிவுகள் ஹேஷ்டேக் முதலிடத்திலும் உள்ளது.
த்ரிஷா பிறந்தநாளில் தவெகவுக்கு அமோக வெற்றி கிடைக்கிறது. அவர் விஜய்க்கு ராசியான ஹீரோயின் மட்டும் அல்ல தவெகவுக்கும் ராசியானவர் என்று ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். இதற்கிடையே 2017ம் ஆண்டில் த்ரிஷாவை வாழ்த்தி ஆர்யா போட்ட ட்வீட்டை ஷேர் செய்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

த்ரிஷா வீடியோ: முன்னதாக வாக்குப்பதிவு நாளில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய த்ரிஷாவோ தன் புகைப்படத்தை கில்லி பட பாடல் பி.ஜி.எம். சேர்த்து வெளியிட்டபோதே எங்களுக்கு புரிந்துவிட்டது. தலைவி,நீங்க விசில் சின்னத்திற்கு தானே வாக்களித்தீர்கள் என்றார்கள் விஜய் ரசிகர்கள். மேலும் உமா கிருஷ்ணனை காக்கி, வெள்ளை நிற சுடிதாரில் பார்த்ததும் மம்மி உங்களின் ஆதரவுக்கு நன்றி என்றார்கள்.
தவெகவுக்கு கிடைத்திருக்கும் அமோக ஆதரவை பார்த்து விஜய்யின் தீவிர ரசிகனான சிபி சத்யராஜ் ஒரு பக்கம் சந்தோஷம் தாங்க முடியாமல் ட்வீட் செய்வதுடன், இன்ஸ்டாவில் ஸ்டோரிகள் போட்டு வருகிறார். விசில் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் கொண்டாடமாக இருக்க, மற்றவர்களோ இனி என் ஸ்டேட் கேரளா, என் முதல்வர் பினரயி விஜயன் என்கிறார்கள். மேலும் சிலரோ, இனி நன்ன ராஜ்யா கர்நாடகா, நன்ன முதல்வர் சித்தராமையா என்று சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
முதல்வரின் ஜனநாயகன்: விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இன்னும் ரிலீஸாகாமல் இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் என அந்த படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
சென்சார் சிக்கலில் சிக்கி ரிலீஸ் தள்ளிப் போனதும் ஒரு வகையில் நல்லதாகிவிட்டது. சி.எம். டைட்டில் கார்டு போடலாமே என்று விஜய் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். இதற்கிடையே மகனுக்காக திருத்தணி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்தது குறித்து ட்வீட் செய்திருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர்.