Dailyhunt
கடக ராசி பெண்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும் Numerology எண்கள்!

கடக ராசி பெண்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும் Numerology எண்கள்!

Samayam Tamil 1 month ago

ண் கணித குறிப்புகள் படி மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிக்கு தனித்துவமான 'அதிர்ஷ்ட எண்கள்' வழங்கப்படுகின்றன.

குறித்த இந்த அதிர்ஷ்ட எண்கள், தங்களுக்கு உரிய ராசியினருக்கு பல்வேறு வழிகளில் அதிர்ஷ்டத்தை கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் கடக ராசியினருக்கு (கடக ராசி பெண்களுக்கு) ஒதுக்கப்பட்ட அதிர்ஷ்ட எண்கள் என்ன? இந்த எண்கள் கொண்டு வரும் பலன்கள் என்ன? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!


ராசி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்ட எண்கள் வழங்கப்படுகின்றன. குறித்த அந்த எண்கள், ராசிக்கு உரியவர்களின் செழிப்புக்கு வழிவகுக்கிறது. அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது, பொருளாதார ரீதியாக வலப்படுத்துகிறது. அவர்களின் இலக்குகளை அடையவும் பல்வேறு வழிகளில் உதவி செய்கிறது. அந்த வரிசையில் கடக ராசி பெண்களுக்கு 2, 7, 9 மற்றும் 11 ஆகிய எண்கள் அதிர்ஷ்டத்தை அளிக்கும் எண்களாக பார்க்கப்படுகிறது. குறித்த இந்த எண்கள், கடக ராசி பெண்களுக்கு அளிக்கும் நன்மைகள் என்ன? அவர்களின் வாழ்க்கையில் உண்டாக்கும் தாக்கம் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!எண் 2 அளிக்கும் நன்மைகள்!

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு எண் 2, காதல் வெற்றிக்கு உதவி செய்கிறது. தங்கள் வாழ்க்கையின் அர்த்தங்களை புரிந்துக்கொள்ளவும், எதிர்காலத்தை அறிந்துக் கொள்ளவும் உதவி செய்கிறது. உறவுகளின் முக்கியத்துவத்தையும் இது உணர்த்துகிறது. நிபுணர்கள் கூற்றுப்படி எண் 2 ஆனது, சமநிலையை உறுதி செய்யும் ஒரு எண் ஆகும்.

அந்த வகையில் கடக ராசி பெண்களின் தொழில் வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கை இரண்டிற்கும் இடையே ஒரு ஆரோக்கிய சமநிலையை இது உறுதி செய்கிறது. அதேநேரம், புதிய உறவின் தொடக்கத்திற்கான வாய்ப்பையும் கொண்டு வருகிறது.


எண் 7 - இலக்குகளை அடைய உதவும்!

கடக ராசியினருக்கு எண் 7 மற்றும் 43 ஆகிய இரண்டு எண்களும் தொழில் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் எண்களாக பார்க்கப்படுகிறது. மேலும் லட்சியத்தை அடைய அவர்களுக்கு உதவி செய்யும் எண்களாகவும் பார்க்கப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் காணப்படும் சவால்களை எதிர்கொள்ளவும், எதிர்த்து போராடி வெற்றி காணவும் இந்த எண்கள் உதவி செய்யும். ஊக்கப்படுத்தும், உற்சாகப்படுத்தும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் எனவும் எண் கணித நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.


எண் 9 - வளர்ச்சியை கொண்டு வரும்!

​கடக ராசி பெண்களின் வாழ்க்கையில் வளர்ச்சி, எதிர்பார்த்த திருப்பத்தை கொண்டு வரும் ஒரு எண்ணாக எண் 9 பார்க்கப்படுகிறது. ஆளுமை பண்புகளுடன் தொடர்பு கொண்ட இந்த எண், கடக ராசி பெண்களின் தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வருகிறது.

புதிய வாய்ப்புகளை கொண்டு வரும், ஆற்றல் சமநிலைக்கு உதவி செய்யும், தெளிவான சிந்தனைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை உருவாக்கவும் இது உதவியாக இருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஆக, கடக ராசி கொண்ட பெண்கள், தங்கள் தொழில் வாழ்க்கை குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கையில் எண் 9-க்கு முன்னுரிமை அளிப்பது நல்லது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.


தெளிவை கொண்டு வரும் எண் 11

கடக ராசி பெண்களின் மன அமைதி, குழப்பங்களுக்கு தீர்வு கொண்டு வரும் ஒரு எண்ணாக எண் 11 பார்க்கப்படுகிறது. உங்கள் தொழில் வாழ்க்கை / தனிப்பட்ட வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்வது தொடர்பான குழப்பங்களுக்கு தீர்வு கொண்டு வரும் ஒரு எண்ணாக இது பார்க்கப்படுகிறது. எண் கணிதத்தில் நற்செய்தியை தாங்கி வரும் சிறப்பு எண்களில் ஒன்றாக 11 பார்க்கப்படும் நிலையில், கடக ராசி பெண்களின் வாழ்க்கையில் எதிர்பார்த்த நற்செய்தியை கொண்டு வரும் ஒரு எண்ணாகவும் இதனை நாம் எடுத்துக்கொள்ளலாம்.


அதிர்ஷ்டமான ஆண்டுகள்!

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும் எண்களாக 7, 16, 25, 34, 43 பார்க்கப்படும் நிலையில், குறித்த இந்த எண்களுடன் முடியும் ஆணுகள் சிறப்பான பலன்களை அளிக்கும் ஆண்டுகளாக பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் 2025, 2034... போன்றவை கடக ராசி பெண்களுக்கு சாதகமான ஆண்டுகளாக பார்க்கப்படுகின்றன.

பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களை பொதுவான எண் கணித கணிப்புகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அறிவியல் பூர்வமான ஆதாரங்களை கொண்டிருக்கவில்லை!


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil