Dailyhunt
கைரேகை ஜோதிடத்தில் சந்திர மேடு; அதன் முக்கியத்துவம் மற்றும் பலன்கள்

கைரேகை ஜோதிடத்தில் சந்திர மேடு; அதன் முக்கியத்துவம் மற்றும் பலன்கள்

Samayam Tamil 0 months ago

வேத ஜோதிடத்தில் சந்திரன் உணர்வுகள், உறவுகள் மற்றும் மன அமைதியை குறிக்கும் ஒரு கிரகம் ஆகும். கைரேகை சாஸ்திரத்தில் இந்த சந்திரனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில், சந்திர மேடு குறிப்பிடப்படுகிறது.

சந்திரனின் குணாதிசயத்தை பிரதிபலிக்கும் ஒரு இடமாகவும், ரேகைக்கு உரியவரின் எதிர்காலத்தை கணிக்கும் ஒரு முக்கிய காரணியாகவும் இந்த பகுதி பார்க்கப்படுகிறது. அடிப்படையில் இந்த பகுதி, தனி நபரின் படைப்பாற்றல், அறிவாற்றலை குறிக்கும் ஒரு இடமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தும் மைய புள்ளியாகவும் பார்க்கப்படுகிறது.

சந்திர மேட்டின் பண்புகள்!

  • உங்கள் உள்ளங்கையில் இருக்கும் சந்திர மேடு, தெளிவாகவும் - உப்புசலாகவும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் படைப்பாற்றல் மிக்க ஒரு நபராக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம்.
  • சந்திர மேட்டின் பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் மென்மையாக இருக்கும் பட்சத்தில், ரேகைக்கு சொந்தக்காரர் அடிக்கடி உணர்ச்சிவசப்படும் நபராகவும், ஆன்மீகத்தில் அதீத நாட்டம் கொண்ட ஒரு நபராகவும் இருப்பார்கள். மேலும், கலை - இலக்கியம், இசை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள் - தனித்துவமான சிந்தனை ஆற்றலும் கொண்டிருப்பார்கள்.
  • சந்திர மேட்டில் கீழிருந்து மேல்நோக்கி செல்லும் வகையில் ரேகை இருந்தால், ரேகைக்கு உரிய நபர் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வார்கள். சாகசம் நிறைந்த விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். அரசு தொடர்பான பணிகளில் வெற்றி காண்பார்கள், அரசு பணி பெறும் வாய்ப்பும் காணப்படுகிறது.
  • சந்திர மேட்டில், வெளிப்புறத்தில் இருந்து உட்புறம் நோக்கி ரேகை இருக்கும் பட்சத்தில் - ரேகைக்கு உரியவர், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை பெறுவார்கள். கணவன் மனைவி இடையே பிரச்சனை காணப்படுவது அரிதாகவே இருக்கும்.
  • சந்திர மேட்டில் + குறி இருக்கும் நிலையில், அல்லது மச்சம் அதிகம் காணப்படும் நிலையில், ரேகைக்கு உரிய நபர் சொந்த நாட்டை விட்டு வெளிநாடு செல்வது சிரமமான ஒரு காரியமாக இருக்கும்.
  • சந்திர மேட்டில் கரும்புள்ளிகள், தழும்புகள் இருக்கும் பட்சத்தில், ரேகைக்கு உரிய நபர் நீர் தொடர்பான ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டிருக்கலாம். அதாவது, உடலில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், சளி - காய்ச்சசல், உப்புசம், நீர் கட்டி போன்ற பிரச்சனைகள் வரலாம் / அடிக்கடி தொந்தரவு செய்யலாம் என கூறப்படுகிறது.
  • சந்திர மேடு தட்டையாக இருந்தால், அதேநேரம் வெளிரிய நிறத்தில் இருந்தால் - ரேகைக்கு உரிய நபர் குழப்பங்கள் நிறைந்த ஒரு நபராக இருப்பதன் வாய்ப்பு அதிகம். சற்று குழப்பமான மனநிலை கொண்ட ஒரு நபராக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், குழப்பத்தின் காரணமாக அடிக்கடி தவறான முடிவுகளை எடுப்பதன் வாய்ப்பும் அதிகம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் காண...

  • சந்திர மேட்டில் காணப்படும் எதிர்மறை அடையாளங்கள் - குறியீடுகள், நம் வாழ்க்கையில் எதிர்மறை பலன்களை கொண்டு வரலாம். இதனை தவிர்க்க வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் சிவனை முறையாக வழிப்படுவது நல்லது.
  • சந்திரனை போற்றும் ஓம் ஷ்ராம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ சந்திராய நமஹ எனும் மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள்.
  • நாம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஆபரணங்களில் வெள்ளியின் இருப்பு அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். சந்திரனை குறிக்கும் இந்த உலோகம், நம் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள், பொதுவான ஜோதிட கணிப்புகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல்கள் அல்ல!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil