Dailyhunt
கணக்கில் மறைந்த முக்கிய சொத்து.. வேட்புமனு தாக்கல் விவகாரம்- விஜய்  சேர்ந்த முக்கிய தகவல்!

கணக்கில் மறைந்த முக்கிய சொத்து.. வேட்புமனு தாக்கல் விவகாரம்- விஜய் சேர்ந்த முக்கிய தகவல்!

Samayam Tamil 2 weeks ago

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்திருந்தார். அந்த வரிசையில் தவெக கட்சியின் தலைவர் விஜய் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார்.அதில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.இதற்காக கடந்த மார்ச் 30 ஆம் தேதி முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் விஜய் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

விஜய் 2 தொகுதியில் போட்டி

இதனைத் தொடர்ந்து கொளத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.அப்போது விதிகளை மீறியாவ்தாக கூறி விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு சென்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.அப்போது கடந்த 2025ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடந்த தவெக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்தபோது,விஜய் நடந்து செல்லும் பாதையில் ஏறிய சிலரை அவரது பாதுகாப்பு பணியாளர்கள் கீழே தூக்கி எறிந்தனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர் மதுரையில் புகார் அளித்தார். இந்த வழக்கு குறித்து திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த தனது வேட்புமனுவில் விஜய் குறிப்பிட்டு இருந்தார்.


தேர்தல் விதிகள் என்ன சொல்கிறது?

ஆனால் பெரம்பூரில் விஜய் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் வழக்குகள் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.இந்த நிலையில் தான் வேட்புமனுவில் விஜய் சொத்து விவரம் வெளியாகி தலைவலியை ஏற்படுத்தியது.இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிகளின் படி, ஒரு வேட்பாளர் தாக்கல் செய்யப்படும் பிரமாண பத்திரத்தில் வழக்கு தொடர்பான உண்மையை மறைப்பது அல்லது தவறான தகவல்களை அளிப்பது சட்டவிரோதமாகும்.இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டால் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும். அதுமட்டுமின்றி சம்மந்தப்பட்ட நபரின் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

வேட்புமனுவி விஜய் கூடுதலாக சேர்த்த விஷயம்

மேலும், தேர்தலில் வேட்பாளரகா களமிறங்க முடியாது. தற்போது விஜய் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால்,வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகினர். இது தவெகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.இந்த நிலையில் குற்ற வழக்குகள் தொடர்பாக காவல்துறையினரிடமிருந்து இதுவரை எந்த சம்மன் அல்லது அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்றும் ,தற்பொழுது தான் இந்த விவகாரம் தனக்கு தெரிந்ததால் இதை மனுவில் குறிப்பிட்டுள்ளதாக விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பெரம்பூர் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும்போது மதுரை மாநாட்டில் நடந்த சம்பவம் குறித்த வழக்கில் எஃப் ஐ ஆர் தகவல் இடம்பெறாததால் அதனை திருத்தி மதுரை மற்றும் கொளத்தூர் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை சேர்த்து கூடுதல் பிரமாண பத்திரிக்கை நேற்று தாக்கல் செய்து உள்ளார். இதற்கிடையில், திருச்சி கிழக்கு தொகுதியிலும் இதேபோல் கூடுதல் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 6.25 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது பிரச்சார வாகனத்தை சொத்து விவரங்களில் குறிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தையும் சேர்த்து புதிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.முன்னதாக தனது அசையும் சொத்து மதிப்பு 404 கோடி ரூபாய் என தெரிவித்திருந்த விஜய், தற்போது அந்த பிரச்சார வாகனத்தையும் சேர்த்து மொத்த மதிப்பை சுமார் 410 கோடி ரூபாயாக புதுப்பித்து, ஏப்ரல் 4ஆம் தேதி தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில் அறிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil