Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கனவில் பல்லி பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்?- ஸ்வப்ன சாஸ்திர விளக்கம்

கனவில் பல்லி பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்?- ஸ்வப்ன சாஸ்திர விளக்கம்

Samayam Tamil 2 weeks ago

நாம் தூங்கும்போது நம்முடைய கனவில் வரக்கூடிய சில விஷயங்கள் நல்லது சில பொருட்களை பார்ப்பது நம்முடைய வாழ்க்கையில் தகுதி ஏற்படுத்தும் என ஸ்வபன் சாஸ்திரம் கூறுகிறது.

சில விஷயங்கள் நன்மையான பலனையும், சில சற்று மோசமான பலன்களை தரக்கூடியதாக எச்சரிக்கை தரும் விதத்தில் அமைகிறது. ஒருவர் பள்ளியை தன்னுடைய கனவில் கண்டால் அதற்கான பலன் என்ன என்று தெரிந்து கொள்வோம்.


நம்பும்போது கனவு வருவது இயல்பானது தான். ஆனால் அவற்றில் பெரும்பாலான கனவுகள் நாம் தூங்கி எழும்போது மறந்து விடுவோம். ஆனால் சில கனவுகள் பல நாட்கள் ஆகி இருக்கும் நம் நினைவில் இருந்து விலகாமல் இருக்கும். நாம் கனவில் காணக்கூடிய சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகின்றன. இந்த விதத்தில் ஒருவர் பல்லியை கனவில் கண்டால் அது அந்த நம்பருக்கு எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை கனவு சாஸ்திரம் கூறுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.கனவில் உடலின் மீது பல்லி ஏறுவது
  • கனவு சாஸ்திரத்தின்படி, உங்களுடைய கனவில் ஒரு பள்ளி உங்களுடைய உடலின் மீது விழுவது போன்று கண்டால், வரும் நாட்களில் உங்களுடைய எதிரிகளால் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
  • கனவில் ஒரு பள்ளி அவரின் தலையின் மீது ஏறுவது போல கண்டால், அந்த நபருக்கு உடல் நல பிரச்சினைகள் ஏற்படும்.
  • அதை போல ஒருவருடைய இடது தோளில் மீது பல்லி ஏறுவதை கண்டால் அவருக்கு புதிய ஆற்றலும், மன தைரியமும் உருவாகும் என்று அர்த்தம்.
  • அதுவே பள்ளி உங்களுடைய வலது தோளில் ஏறுவதாக கண்டாலும் நீங்கள் மன அழுத்தத்தைச் சந்திக்கக்கூடும் என்று அர்த்தம்.​

கனவில் பல்லி ஓடிப் போவது

ஒருவர் தன்னுடைய கனவில் பல்லி ஓடிப் போவது போல கண்டால் அது இந்த நபரின் வாழ்க்கையில் மங்களகரமான சில விஷயங்கள் நடக்கும் என அறிகுறியாக காட்டுகிறது. நீண்ட நாட்களாக சந்தித்து வரக்கூடிய மன அழுத்தம் அல்லது பிரச்சினைகள் நீங்கும் என அது குறிப்பிடுகிறது.


பல்லியைக் கொல்வது போல கனவு கண்டால்

நீங்களும் உங்களுடைய கனவில் ஒரு பள்ளியை கொல்வது போன்ற கனவு கண்டால், அந்த நபருக்கு நல்ல பலன்களை தரக்கூடியதாக கருதப்படுகிறது. இந்த கனவு ஆனது உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் இவரை முடிவுக்கு வரும். வளமான வாழ்க்கை தேடி வரும். உங்கள் மன தைரியம் உயரம் என்பதால் கஷ்டமான சூழ்நிலை சமாளிக்க முடியும்.


கனவில் நிறைய பல்லிகளைக் காண்பது

உங்கள் கனவில் நீங்கள் பல பல்லிகளைக் பார்க்க நேர்ந்தால், அது உங்களுடைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரும் கடினமான காலமாக அமையும். உங்களுடைய தொழில் வாழ்க்கையில் சில தடைகளையும் அதனால் மன அழுத்தம் சந்திக்க நேரிடும்.


ஒரு குட்டி பல்லியைக் கனவில் காண்பது

உங்களுடைய கனவில் ஒரு சிறிய குட்டி பள்ளியை காண்பது, வரும் காலத்தில் உங்களுக்கு சற்று சிரமங்களை தரக்கூடியதாக அமையும். எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமாக வாய்ப்பு உண்டு. நீங்கள் மேற்கொள்ளும் வேலையை முடிக்க கடின உழைப்ப தேவைப்படும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil