Dailyhunt
காங்கிரஸ் கட்சியை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.. ஜோதிமணி எம்பி காட்டம்

காங்கிரஸ் கட்சியை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.. ஜோதிமணி எம்பி காட்டம்

Samayam Tamil 1 week ago

ட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்துக்கு யார் ஆதரவு அளிக்க போகிறார்கள் என்பது அரசியல் களத்தில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

இதனிடையில் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் எடுத்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் காட்டமான பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதாவது, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அதாவது, ஒரு ஒட்டுண்ணு காங்கிரஸ். தேவையான வரை திமுகவை பயன்படுத்திவிட்டு தற்போது கழட்டி விட்டு விட்டது. எப்போதும் பிராந்திய கட்சிகளை காங்கிரஸ் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகிறது. அந்த வகையில் தற்போது திமுகவை பயன்படுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியானது தூக்கி எறிந்து விட்டது என பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், "பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. பாஜக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கூட்டணி கட்சிகளையும் அழித்து விட்டு அவர்கள் இடத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை பாஜக நினைவில் கொள்ளட்டும். அஸ்ஸாம்.கண பரிசத், SAD,PDP, JD (S),JD( U), Siva sena, HVM, அதிமுக உள்ளிட்ட பாஜக அழித்தொழித்த கட்சிகளுடைய பட்டியல் வெகு நீளம்.

தமிழ்நாட்டை அழிப்பதற்கு பாஜக துடித்து கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்ற வேண்டிய வரலாற்று கடமையை நாங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. எந்த கூட்டணி கட்சிகளையும் அழித்து எங்களுக்கு பழக்கம் இல்லை. இவ்வாறு தன்னுடைய பதிவில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமாக பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு கீழ் ஏராளமான கமெண்ட்கள் தற்போது குவிந்து கொண்டிருக்கிறது.

இதனிடையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் ரிசல்ட் வெளியானதில் இருந்து விஜய்யை பாராட்டி வந்த நிலையில், சில நிபந்தனைகளுடன் தவெகவுக்கு ஆதரவளித்துள்ளது காங்கிரஸ். பாஜக உள்ளிட்ட வகுப்பு வாத கட்சிகளுடன் கூட்டணி செல்லக் கூடாது. அதிகார பகிர்ந்து மற்றும் உரிய மரியாதையை காங்கிரஸுக்கு வழங்க வேண்டுமென நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதோடு உள்ளாட்சி தேர்தலிலும் தவெக, காங்கிரஸ் தொடர வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் களத்தில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. திமுகவுடன் 20 ஆண்டு காலமாக கூட்டணியில் தொடர்ந்த காங்கிரஸ், தற்போது கூட்டணியை முறித்துள்ளது. இது திமுகவினர் மத்தியில் கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சோஷியல் மீடியாவில் காங்கிரஸை காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்டு ஐந்து வெற்றி பிறகு, தற்போது தவெகவுக்கு தாவியுள்ளது என்ன நியாயம் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு திமுகவிடம் மாநிலங்களவை பதவியை பெற்று விட்டு, தற்போது கூட்டணி தாவியுள்ளதும் கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இதனிடையில் மேலும் சிலர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil